கார்மல் மேல்நிலை பள்ளியில் 1984-1991 ஏ பிரிவில் படித்த முன்னாள் மாணவர்கள், தாங்கள் பள்ளியை விட்டு வெளி வந்து 35 வருடங்கள் நிறைவடைந்ததை சமீபத்தில் கொண்டாடினார்கள். இந்த வகுப்பு தோழர்கள், ஒவ்வொரு ஆண்டும் சந்தித்தாலும், இந்த ஆண்டு 35 வருடம் முடிந்ததால், இந்த கூடுகை தனி சிறப்புடன் அமைந்தது. இதுவரை நடந்த கூடுகைகளில் கலந்து கொள்ள முடியாதவர்கள் கூட, இந்த கூடுகையில் கலந்து கொண்டு பழைய நினைவுகளை பகிர்ந்து சந்தோஷமாகினர்கள். இந்த வகுப்பில் பலர் சிறப்பு மருத்துவர்களாகவும், அமெரிக்க, ஐரோப்பா கண்டங்களில் மென் பொறியாளர்களாகவும், தொழில் அதிபர்களாகவும், வக்கீல்களாகவும், மேலாளர்களாகவும் உயர்ந்து உள்ளனர். இவர்களுக்கு பள்ளியில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டு, தங்கள் பள்ளியின் தாளாளர், தலைமை ஆசிரியர், துணை தலைமை ஆசிரியர், மற்றும் ஆசிரியர்களுடன் ஒரு சிறந்த நிகழ்ச்சி நடைபெற்றது. வகுப்பு தோழர்கள் தாங்கள் படித்த வகுப்புகளுக்கு சென்று பழைய நிகழ்வுகளை நினைவுபடுத்தி சந்தோஷப்பட்டனர். பின்னர் குழு புகை படம் எடுத்து அந்த மகிழ்ச்சியான நாளை அழியாத நிகழ்வாக மாற்றி கொண்டாடினர்.