சிபிஐஎம்எல் லிப்ரேசன் கன்னியாகுமரி மாவட்ட கமிட்டி சார்பில் செப்டம்பர் மாதம் 15 ம் தேதி மாலை 4 மணிக்கு நாகர்கோவில் ஸ்டேடியம் அருகில் மணிப்பூரை காப்போம் என்ற முழக்கத்துடன் பாடகர் கோவன் கலை நிகழ்ச்சிகளுடன் கண்டன பொதுக்கூட்டம் அந்தோணி முத்து தலைமையில் நடக்க உள்ளது. இதற்கான முன் தயாரிப்பாக வீடுகள் தோறும் நோட்டீஸ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சி மாவட்ட செயலாளர் அந்தோணி முத்து தலைமையில் சுசீலா, செல்வராஜ், கார்மல், அர்ஜூனன் உட்பட பலர் கலந்து கொண்டு வீடுகள் தோறும் கண்டன பொதுக்கூட்டம் குறித்த நோட்டீஸ் வழங்கினர்.