தேசிய அருங்கொடை இறைவேண்டல் பெருவிழா மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலயத்தில் நடந்தது. தேசிய அருங்கொடை இறைவேந்தல் பெருவிழா இவ்வாண்டு தேசிய அளவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. குழித்துறை மறை மாவட்டம் சார்பாக மாடத்தட்விளை பங்கில் இவ்விழா நடைபெறுகிறது இதற்கான வழிகாட்டுதல் சுற்றறிக்கையை மேதகு பேராயர் அந்தோணி பாப்புசாமி மறை மாவட்டத்தில் உள்ள எல்லா பங்குகளுக்கும் அனுப்பப்பட்டது. இந்த சிறப்பு வழிபாட்டில் அருள் பணியாளர்கள், அருள் சகோதரிகள், இறை மக்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடப்பட்டது. அதன்படி கன்னியாகுமரி மாவட்டம் மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலயத்தில் மாலையில் நற்செய்தி பெருவிழாவும் அதை தொடர்ந்து நற்கருணை பணியும், திருப்பலியும் நடந்தது. இந்த தேசிய அருங்கொடை இறைவேண்டல் பெருவிழா குழித்துறை மறைமாவட்ட தொடர்பாளர் பேரருட்பணி இயேசுரெத்தினம் தலைமையில் மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலய பங்குத்தந்தை அருட்பணி ஜெயக்குமார் முன்னிலையில் நடந்தது. இதில் அருட்பணியாளர்கள், அருட்சகோதரிகள், பங்கு அருட்பணி பேரவை நிர்வாகிகள் மற்றும் இறைமக்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.