அரசு பள்ளிக்கு சமையல் உபகரணங்கள் வழங்கிய தவ்ஹீத் ஜமாஅத்
தமிழக அரசு புதிதாக கொண்டு வந்த முதலமைச்சரின் விரிவான காலை உணவுத் திட்டத்தை முன்னிட்டு குளச்சல் இலப்பவிளை அரசு தொடக்கப் பள்ளியில் காலை உணவு வழங்கும் நிகழ்வு துவங்கியது.
இதற்கான சமையல் உபகரணங்கள் (பாத்திரங்கள்) வேண்டும் என்று ஆசிரியர்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குளச்சல் கிளைக்கு கோரிக்கை வைத்தனர்.
இதனை தொடர்ந்து குளச்சல் கிளை தலைவர் பாசித் தலைமையில் சமையல் உபகரணங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. இதற்கு முன்னர் மாணவர்களுக்கு நாற்காலிகள் வழங்கப்பட்டதும் குறிப்பிடதக்கது.