கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே சுமார் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் இரு தினங்களாக உடல்நிலை குறைந்த நிலையில் இரணியல் காற்றாடிமுக்கு பஸ் ஸ்டாப்பில் சுற்றி திரிந்தவர் நடக்க முடியாமல் அமர்ந்த நிலையில் இருந்தார். இதை பார்த்த நாடார் மகாஜன சங்கம் கன்னியாகுமரி மாவட்ட தலைவர் முருகன், காங்கிரஸ் நிர்வாகி குருநாதன் மற்றும் பொதுமக்கள் இரணியல் பஞ்சாயத்து 9 வது வார்டு உறுப்பினர் மோகனகுமாருக்கு தகவல் கொடுத்தனர். வார்டு உறுப்பினர் மோகன்குமார் மூதாட்டியை நேரில் வந்து பார்வையிட்டார். உடனே இரணியல் பேரூராட்சி தலைவர் ஸ்ரீ கலா முருகனுக்கு தகவல் கொடுத்தார். உடனே இரணியல் பேரூராட்சி தலைவர் ஸ்ரீ கலா முருகன் மற்றும் துணைத் தலைவர் பகவத் கீதா ஆகியோர் மூதாட்டியை நேரில் வந்து பார்வையிட்டு மூதாட்டியின் நிலமையை கருத்தில் கொண்டு உடனடியாக 108 ஆம்புலன்ஸ்சுக்கு தகவல் கொடுத்தார். விரைந்து வந்து ஆம்புலன்ஸ்சில் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மெடிக்கல் காலேஜ் மருத்துமனைக்கு கொண்டு சென்றனர். மூதாட்டியை ஆம்புலன்சில் அழைத்து செல்ல நடவடிக்கை எடுத்த இரணியல் பேரூராட்சி தலைவி ஸ்ரீ கலா முருகனை பொதுமக்கள் பாராட்டினார்கள்.