பொது மக்களின் ஆதார் சேவையின் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கத்தில் நாகர்கோவில் மற்றும் தக்கலை தலைமை அஞ்சலகங்களில் ஆதார் பதிவு மற்றும் திருத்த சேவைகள் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை வழங்கப்பட்டு வருகின்றன. இந்த சிறப்பு ஏற்பாட்டை விரிவு செய்யும் விதமாக கன்னியாகுமரி அஞ்சல் கோட்டத்தின் கீழ் உள்ள 44 அஞ்சலகங்களில் வரும் 16.1.2024 முதல் ஆதார் பதிவு மற்றும் திருத்த சேவைகள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வழங்கப்பட உள்ளது. புதிய ஆதார் பதிவு இலவசமாக செய்யப்படுகிறது. பெயர், முகவரி, மின்னஞ்சல், அலைபேசி, பிறந்த தேதி முதலியவற்றில் திருத்தம், மாற்றம் செய்யவும் 10 ஆண்டுகளுக்கு மேலான ஆதார் எண்களுக்கான புதுப்பிக்கவும் ரூ.50 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ஆதாரில் இருக்கும் கைரேகை மற்றும் கருவிழி தகவல்களை புதுப்பிக்க ரூ.100 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. உரிய சான்றுகளோடு அருகில் இருக்கும் அஞ்சலகங்களை அணுகி இந்த சேவையைப் பயன்படுத்தி கொள்ளுமாறு கன்னியாகுமரி கோட்டத்தின் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செந்தில் குமார் தெரிவித்து உள்ளார்.