கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த கன மழையால் சாலையோரங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. வில்லுக்குறி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் தண்ணீர் பாய்ந்து ஓடியதால் வாகனங்கள் செல்லும் போது தண்ணீரை பீச்சி அடித்து சென்றது. இந்த கன மழை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்தது.