கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் வழங்கினார். திருநெல்வேலியில், அரசு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றி, இறந்து போன 32 பணியாளர்களின் வாரிசு தாரர்களுக்கு, கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரன் வழங்கினார். அப்போது, தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, மாவட்ட ஆட்சியாளர் கார்த்திகேயன், நிர்வாக இயக்குனர், துணை மேலாளர் வணிக நாகர்கோவில், நாகர்கோவில் ஜெனரல் மேனேஜர், டி எம் ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 3 டிரைவர், 11 கன்டெக்டர்கள், 1 டெக்னிக்கல் ஸ்டாப் என்று 15 பேருக்கு நியமன ஆணைகள் வழங்கப்பட்டது.
கருணை அடிப்படையில் 15 பேருக்கு பணி நியமன ஆணை
