நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம் தலைமையில் கோட்ட அளவில் நடைபெற்ற கூட்டத்தில் தேர்தல் வாக்குச்சாவடி அடிப்படை வசதிகள் விசாரணை அடிப்படையில் நீக்கம் செய்யப்பட்டது, திருத்தங்கள் மேற்கொள்ளபட்டது குறித்து அரசியல் கட்சி பிரதிநிதிகளிடம் எடுத்துரைக்கப்பட்டது. மேலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் செயல்பாடு குறித்து விளக்கி கூறப்பட்டது.தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி கோட்ட அளவிலான அரசியல் கட்சி பிரதிநிதிகள் சகிதம் வாரம் தோறும் நடைபெறும் கூட்டத்தில் தற்போது நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் வெளியிடுவது தொடர்பான சிறப்பு சுருக்கத் திருத்தம் செய்யும் பணி குறித்தும் வரும்
22 .1.2024 புதிய வாக்காளர் பட்டியல் வெளியிடுவது குறித்தும், சிறப்பு திருத்த முகாமின் போது பெறப்பட்ட வாக்காளர் பெயர் சேர்த்தல் திருத்தல் நீக்கல் போன்ற மனுக்கள் தீர்வு செய்த விவரங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது மேலும் வாக்குப்பதிவு எந்திரம் விழிப்புணர்வு தொடர்பாக வாக்காளர் பதிவு அதிகாரி அலுவலகத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ள பயிற்சி வாக்குப்பதிவு எந்திரத்தில் வாக்குப்பதிவு எந்திரம் செயல்படும் விதம் குறித்தும் வாக்குப்பதிவு என்பது வாக்குப்பதிவு செய்யும் குறிப்பிட்டார் சின்னத்திற்கு வாக்குப்பதிவு முறையாக அச்சிட்டு துண்டு சீட்டு வருவது குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது மேலும் கூட்டத்தில் கலந்து கொண்ட அலுவலர்களிடம் வாக்குச்சாவடிகளின் தற்போதைய நிலை குறித்தும் அடிப்படை வசதிகள் முழுமையாக உள்ளதை உறுதி செய்வது தொடர்பாகவும் கள விசாரணை அறிக்கையை உடனடியாக சமர்ப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டது. நாகர்கோவில் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் சுப்பிரமணியன் உட்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.