
தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் என்பது குழந்தைகளின் உரிமைகளை பாதுகாப்பது மற்றும் உறுதி செய்வதற்காக 2005-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சட்ட ரீதியான ஒரு அமைப்பாகும். குழந்தைகளின் உரிமைகளுக்கு எதிரான வன்முறைகள் குறித்த புகார்கள் மீது விசாரணை மேற்கொள்வது இவ்வாணையத்தின் முக்கியமான செயல்பாடுகளில் ஒன்றாகும்.
இவ்வாணையத்தின் சார்பில், சிவகங்கை மாவட்டத்தில் வருகின்ற 14.10.2023 அன்று திருப்பத்தூர் நாகப்பா மருதப்பா மகளிர் மேல்நிலைப் பள்ளியில், காலை 9 மணியளவில், சிறப்பு குறைதீர் அமர்வு நடைபெற உள்ளது.
இதில், காணாமல் போன குழந்தைகள் / கடத்தல், நிதி ஆதரவு (மாதம் ரூ.4000 வீதம்), குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள், ஆதரவற்ற குழந்தைகள் இல்லம் தேவைப்படும் குழந்தைகள், குழந்தை திருமணம், குழந்தைகளின் கல்வி, குழந்தைகளின் மருத்துவம் மற்றும் சுகாதாரம், சட்ட உதவி, குழந்தைகளுக்கெதிரான பாலியல் குற்றங்கள், குழந்தை தொழிலாளார் / கொத்தடிமை குழந்தைகள், பிச்சை எடுக்கும் குழந்தைகள், மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு ஏற்படுகின்ற பிரச்சனைகள், சட்டத்திற்கு முரண்பட்ட குழந்தைகள் மற்றும் குழந்தைகள் போதை பொருள் பயன்படுத்துவது ஆகியன தொடர்பாக, பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் இந்த அமர்வில் கலந்து கொண்டு நேரடியாக புகார் மனுக்களை அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.