சிறப்பு குழந்தைகளின் ஒரு நாள் கல்லூரி வாழ்க்கை மாணவிகள் நெகிழ்ச்சி

Share others

குழித்துறை,ஸ்ரீ தேவி குமாரி மகளிர் கலைக்கல்லூரி முதல்வர் மற்றும்
நிர்வாகத்தினர் குழித்துறை ஹோம் அறிவுசார் குறைபாடுடைய குழந்தைகளை அழைத்து
கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடி கல்லூரி பார்வையிடும்
நிகழ்வு
மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள். வரலாற்று சிறப்புமிக்க இந்த நிகழ்வு
கல்லூரி அரங்கில் வைத்து நடந்தது. கல்லூரி மாணவிகள்
சிறப்புக்குழந்தைகளை பூச்செண்டு வழங்கி வரவேற்றார்கள். தொடர்ந்து நடந்த
துவக்க நிகழ்விற்கு கல்லூரி முதல்வர் முனைவர் பிந்துஜா தலைமை
தாங்கி துவக்கி வைத்தார். கல்லூரி மாணவிகள் தமிழ்த்தாய் வாழ்த்து
பாடினார்கள். ஆங்கிலத்துறைத் தலைவரும் யூனியன் துணைத்தலைவருமான
முனைவர் சுபாசினி நிகழ்ச்சியின் முக்கியத்துவத்தை குறித்து எடுத்துக்
கூறி அறிமுகவுரை ஆற்றினார். யூனியன் பொருளரும் ஆங்கிலத்துறை
பேராசிரியருமான முனைவர் சுஜூ வரவேற்றார்.
தொடர்ந்து சுவாமியார்மடம் ரெத்னா நினைவு மருத்துவமனை இயக்குநரும் மகளிர்
நல மருத்துவருமான
டாக்டர் சாந்தி மாற்றுத்திறனாளிகள் பிறக்க
காரணங்கள், கர்ப்பகாலத்தில் கவனிக்க வேண்டியவை, இளம் மகளிர் கடைபிடிக்க
வேண்டிய மருத்துவ குறிப்புகள். மாற்றுத்திறனாளிகள் பிறப்பு விகிதத்தை குறைக்க
நாம் மேற்கொள்ள வேண்டிய தடுப்பு முறைகள் போன்றவை குறித்து விழிப்புணர்வு
பல்வேறு உதாரணங்களுடன் எடுத்துக்கூறி சிறப்புரை ஆற்றினார். தொடர்ந்து
நாகர்கோவில் நாஞ்சில் நாதத்தின் முன்னாள் செயல் இயக்குநர்
அலோசியஸ் சிறப்புக் குழந்தைகளும் கல்லூரி மாணவர்களும்
கலந்துரையாடல் நிகழ்ச்சிகளை நடனம், பாடல், அறிமுகம் மற்றும் பல்வேறு சிறப்பு
நிகழ்வுகளுடன் மிகச்சிறப்பாக வழிநடத்தினார். தொடர்ந்து சிறப்புக்
குழந்தைகளுக்கும் பணியாளர்களுக்கும் கல்லூரி மாணவிகள் உறவின் விருந்து
வழங்கி மகிழ்ந்தார்கள். மதியத்திற்கு பின் நடந்த அனுபவ பகிர்வு நிகழ்விற்கு குழித்துறை
ஒருங்கிணைந்த நீதிமன்ற சார்பு நீதிபதி சுந்தரி
சிறப்புவிருந்தினராக கலந்துக் கொண்டு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு. தமிழ்
நாட்டிலேயே முதன்முதலாக தான் நான் இப்பெரும் நிகழ்வை பார்க்கின்றேன்.
இதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்த ஸ்ரீ தேவிகுமாரி மகளிர்
கலைக்கல்லூரி முதல்வர் மற்றும் நிர்வாகத்தினரை நான் வெகுவாக
பாராட்டுகின்றேன். இதுபோன்று அனைத்து கல்வி நிறுவனங்களும் செய்திட முன்வர
வேண்டும். அதுபோன்று கல்லூரி மாணவிகள் புத்தகங்கள் படிக்கும் வழக்கத்தை
உருவாக்க வேண்டும். இன்றைய தினம் படித்த ஒரு
புத்தகத்தின் தகவலை மேற்கோள்காட்டி பெண்கள் விழிப்புணர்வு பெற வேண்டும்
என்றும் நல்ல ஆரோக்கியமான குழந்தைகளை பெண்கள் தான் இந்த
சமூகத்திற்கு கொடுத்திட முடியும் என்றும் தனது சிறப்புரையில் குறிப்பிட்டார்.
தொடர்ந்து ஹோம் இயக்குநர்/ தாளாளர் அருட்தந்தை. அஜீஸ் குமார்
நம் மாநிலத்திற்கே உரித்தான முன்மாதிரி நிகழ்வாக
சிறப்புக்குழந்தைகளின் ஒரு நாள் கல்லூரி வாழ்க்கை நிகழ்வை வெகுவாக
பாராட்டினார். தொடர்ந்து இறுதி நிகழ்விற்கு தலைமை தாங்கிய கல்லூரி
முதல்வர் முனைவர் பிந்துஜா கல்லூரி மாணவர்களாம் எம் தேவதைகள்
கடவுளின் குழந்தைகளாம் இச்சிறப்புக் குழந்தைகளை ஒருநாள் முழுதும்
பராமரித்து பேணி பாதுகாத்தது மனதிற்கு இதமாக இருக்கின்றது. இவர்களும்
நம்மோடு வாழும் குழந்தைகள் தான் அவர்களை மதிக்கவும் பராமரிக்கவும் தான்
கடவுள் நம்மை படைத்திருக்கின்றார் என தமது தலைமையுரையில்
மாணவிகளையும், பேராசிரியர்களையும் பாராட்டினார்.
தொடர்ந்து கல்லூரி மாணவிகள் தமது அனுபவங்களை பகிர்ந்து கொண்டது
இன்னும் சிறப்பாக இருந்தது. ஹோம் சிறப்புப்பள்ளியின் தலைமையாசிரியர்
டென்னிஸ் இந்த மாபெரும் நிகழ்விற்கு உழைத்த ஒத்துழைத்த அனுமதி
வழங்கிய கல்லூரி நிர்வாகத்திற்கும் குறிப்பாக முதல்வருக்கும் நன்றி கூறினார்.
முன்னதாக கல்லூரி மாணவிகள் சிறப்புக்குழந்தைகளை பத்து குழுக்களாக
பிரித்து கல்லுரி வளாகத்தை முழுதும் சுற்றி காண்பித்தார்கள். கல்லூரி
வகுப்பறைகள், ஆய்வகங்கள், அலுவலகம், பூங்கா என அனைத்து இடங்களிலும்
சுற்றிக் காண்பித்து மகிழ்வித்தார்கள். நிகழ்ச்சியின் இறுதியில் சிறப்புக்
குழந்தைகள் மற்றும் கல்லூரி மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சி
நடந்தது. நாட்டுப்பண் பாடலுடன் சிறப்புக் குழந்தைகளின் ஒரு
நாள் கல்லூரி வாழ்க்கை நிறைவுபெற்றது. நினைவு பரிசாக அனைவருக்கும்
மரக்கன்றுகள் இனிப்பு பொட்டலங்களும் கல்லூரி முதல்வர் பிந்துஜா வழங்கி
சிறப்பித்தார்.


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *