கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை ஹோம் அறிவுசார் குறைபாடு உடையோருக்கான சிறப்பு பள்ளியில் வைத்து சிறப்பு பள்ளி குழந்தைகளின் பெற்றோர்களுக்கு குழித்துறை ஒருங்கிணைந்த நீதிமன்ற வட்ட சட்டப் பணிகள் குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. நிகழ்ச்சியில் ஹோம் சிறப்பு பள்ளி தாளாளர் அருட்தந்தை அஜீஸ்குமார் வரவேற்றார். குழித்துறை ஒருங்கிணைந்த நீதிமன்ற சார்பு நீதிபதி சரவணபவன் தலைமை வகித்து பேசினார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சிவசங்கரன் அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகள் குறித்து விளக்கினார். குழித்துறை வட்ட சட்டப் பணிக்குழு வழக்கறிஞர் ஸ்ரீ கண்டன், வழக்கறிஞர் ஈடித் பால் ஆகியோர் பேசினர். குற்றவியல் நடுவர் நீதிபதி இசக்கி மகேஷ் குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். சிறப்பு பள்ளியின் தலைமை ஆசிரியர் டென்னிஸ் நன்றி கூறினார்.