நாகர்கோவில் தலைமை அஞ்சலகத்தை தொடர்ந்து தக்கலை அஞ்சலகத்துக்கும் விரிவு

Share others

நாகர்கோவில் மற்றும் தக்கலை தலைமை அஞ்சலகங்களில் ஆதார் பதிவு மட்டும் திருத்த சேவைகள் 5.1.2024 ஆம் தேதி முதல் காலை எட்டு மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட உள்ளது.
பொது மக்களின் ஆதார் சேவையின் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கத்தில் நாகர்கோவில் தலைமை அஞ்சலகத்தில் ஆதார் பதிவு மட்டும் திருத்த சேவை மையத்தின் செயல்பாட்டு நேரம் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை என 22-9-2023-ம் தேதி முதல் மாற்றம் செய்யப்பட்டது. கடந்த 3 மாதங்களில் இந்த நேர நீட்டிப்பின் மூலம் இரண்டு மடங்கு அதிகமான வாடிக்கயாளர்கள் பயன்பெற்று உள்ளனர். இதனை தொடர்ந்து தக்கலை தலைமை அஞ்சலகத்திலும் 5-1-2024 ஆம் தேதி முதல் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை ஆதார் பதிவு மட்டும் திருத்த சேவை மையம் செயல்பட உள்ளது. பெருகி வரும் ஆதார் சேவையின் தேவையினைக் கருத்தில் கொண்டும் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கும், பணிக்கு செல்பவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக அமையும் வகையிலும் செய்யப்பட்டு உள்ள சிறப்பு ஏற்பாட்டை பொதுமக்கள் பயன்படுத்தி பயன்பெறுமாறு கன்னியாகுமரி கோட்டத்தின் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செந்தில் குமார் தெரிவித்து உள்ளார்.


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *