போக்குவரத்து துறை,
இயற்கை வளங்கள் துறை முதன்மை செயலாளர் பனீந்தர் ரெட்டி (அரசின் கூடுதல் தலைமை செயலாளர்)
கன்னியாகுமரி மாவட்டத்தில் 2 நாட்கள் துறைகள் சார்ந்த ஆய்வு மேற்கொண்டார்.
ஐஆர்இ மணவாளக்குறிச்சியில் ஆய்வு முடித்து குழித்துறை பணிமனை, மார்த்தாண்டம் பணிமனையில் போக்குவரத்து துறை சார்ந்த ஆய்வு மேற்கொண்டார்.
பணிமனைகளில் பேருந்து இயக்கம், பணிமனையின் குறைபாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, மரம் வளர்ப்பின் முக்கியத்துவத்தை அனைவரும் அறிந்திடவும், சுற்றுசூழலை பாதுகாத்திடவும் பணிமனைகளில் முக்கனிகளான மா, பலா, வாழை மரங்களை நட்டு வைத்து ஒர் விழிப்புணர்வினை ஏற்படுத்தினார். இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை உயர் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.