நவராத்திரி தினத்தை முன்னிட்டு, திருவிதாங்கூர் மன்னரின் உடைவாள் கேரளா
பாரம்பரிய முறைபடி பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து திருவனந்தபுரத்திற்கு கைமாற்றம்
செய்யும் நிகழ்ச்சியானது நடந்தது இந்த நிகழ்ச்சியில்,
தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் , மாவட்ட
ஆட்சியாளர் ஸ்ரீதர், கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர்
விஜய் வசந்த் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
மத்திய பாராளுமன்ற விவகார இணை அமைச்சர் முரளிதரன், தேவசம்
போர்டு அமைச்சர் ராதாகிருஷ்ணன், கேரள தேவசம் தலைவர் ஆனந்த கோபன்,
செயலாளர் ராஜமாணிக்கம் ஆகியோர்களுடன் உடைவாளினை கைமாற்றம்
செய்து, பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ,
தெரிவிக்கையில்:-
கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ள நவராத்திரி விழாவில் குமரி
மாவட்டத்தில் இருந்து சுசீந்திரம் முன்னுதித்தநங்கை அம்மன், வேளிமலை குமாரசுவாமி,
பத்பநாபபுரம் தேவாரகட்டு சரஸ்வதி அம்மன் சாமி சிலைகள் திருவனந்தபுரத்திற்கு ஊர்வலமாக
எடுத்து செல்லபட்டு அங்கு பத்து நாட்கள் நவராத்திரி விழாவில் பூஜையில் வைப்பது வழக்கம்.
வரும் 23ஆம் தேதி திருவனந்தபுரத்தில் நவராத்திரி விழா துவங்குவதையடுத்து அதில் கலந்து
கொள்வதற்காக குமரி மாவட்டம் சுசீந்திரம் முன்னுதித்தநங்கை அம்மன் சாமி சிலைகள்
நேற்று சுசீந்திரத்தில் இருந்து புறப்பட்டு பத்மநாபபுரம் வந்தடைந்ததை தொடர்ந்து இன்று
உடைவாள் கைமாற்றம் செய்யப்பட்டது.
இந்த உடைவாள் பத்மநாபபுரம் அரண்மனை வளாகத்தில் உள்ள தேவாரகட்டு சரஸ்வதி
அம்மன் ஆலயத்தில் இருந்து சரஸ்வதி அம்மன் எழுந்தருளி யானை மீதேறியும் வேளிமலை
குமாரசுவாமி மற்றும் முன்னுதித்தநங்கையம்மன் சிலைகள் பல்லக்கிலும் பத்பநாபபுரம்
அரண்மனைக்குள் எழுந்தருளியதை அடுத்து இருமாநில காவல்துறையினரின் அணிவகுப்பு
மரியாதை மற்றும் வாத்தியமேளங்களுடன் ஊர்வலமாக கேரளா புறப்பட்டு சென்றது இன்று
மாலை குழித்துறை மஹாதேவர் திருக்கோவிலில் தங்கும் சாமி சிலைகள் நாளை காலையில்
தமிழக கேரளா எல்லையான களியக்காவிளையில் கேரளா அரசிடம் ஒப்படைக்கபடுகிறது.
இவ்வாறு பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ்
தெரிவித்தார்.
நிகழ்ச்சியில், முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், கேரளா தேவசம் போர்டு ஆணையர் .பிரகாசன்,
தொல்லியல்துறை இயக்குநர் தினேசன், இந்துசமய இணை ஆணையர் ரத்தினவேல்
பாண்டியன், இந்து சமய அறநிலையத்துறை அறங்காவலர் குழு மாவட்ட தலைவர்கள்
பிரபா ராமகிருஷ்ணன், ராஜன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுப்பையா,
பத்மநாபபுரம் நகர்மன்ற தலைவர் அருட்சோபன், கல்குளம் வட்டாட்சியர் கண்ணன்,
குற்றவியல் மேலாளர் சுப்பிரமணியம், உறுப்பினர்கள் ராஜேஷ், ஜோதிஷ்குமார்,
துளசிதரன் நாயர், சுந்தரி உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.