இந்தியஅரசின் சுற்றுச்சூழல்,வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகம், புதுடெல்லி,
G.S.R.எண். 37(E)-ன் கீழ் 18.1.2019 அன்று வெளியிட்ட கடலோர ஒழுங்குமுறை மண்டல
அறிவிக்கை, 2019 பத்தி6(ii) ன் படி கடலோர மாநில
அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தங்களது வரைவு கடலோர மண்டல மேலாண்மை திட்ட வரைபடங்கள் மேல் குறிப்பிட்ட அறிவிக்கையின்
பிற்சேர்க்கை-IVல்
தெரிவிக்கப்பட்டுள்ள வழிமுறைகளுக்கு உட்பட்டு கடலோர
ஒழுங்குமுறை மண்டல பகுதிகளை வகைப்படுத்தி 1:25000 என்ற அலகில் வரைபடங்களாக
தயாரிப்பது மட்டுமின்றி புதுப்பிக்கப்பட்ட வரைவு கடலோர மண்டல மேலாண்மை திட்ட
வரைபடங்கள் மீது பொதுமக்களின் கருத்தினை கேட்டறிதலும் வேண்டும் எனவும்
தெரிவிக்கப்பட்டது.
இதன்படி தமிழ்நாட்டிற்கான புதுப்பிக்கப்பட்ட வரைவு கடலோர மண்டல மேலாண்மை
திட்ட வரைபடங்கள் இந்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்
துறையினால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமான “தேசிய நீடித்த மேலாணி
சென்னை” மூலம் தயாரிக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டது.
மேற்படி அறிவிக்கையின் பிற்சேர்க்கை IV – பத்தி 6- ன் படி புதுப்பித்து தயாரிக்கப்பட்ட
வரைவு கடலோர மண்டல மேலாண்மை திட்ட வரைபடங்கள் பெருமளவில்
விளம்பரப்படுத்தப்பட்டு, 1986-ம் வருடத்திய சுற்றுக்சூழல் (பாதுகாப்பு) சட்டத்தில்
தெரிவிக்கப்பட்டுள்ளவாறு ஆலோசனைகள்/ஆட்சேபணைகளை பெறப்பட வேண்டும். எனவும்,
புதுப்பிக்கப்பட்ட வரைவு கடலோர மண்டல மேலாண்மை திட்ட வரைபடங்கள் மீது மாவட்ட
அளவில் பொதுமக்கள் கருத்துகேட்பு கூட்டம். மாவட்ட கடலோர மண்டல மேலாண்மை
அதிகார அமைப்பால் நடத்தப்பட
வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு புதுப்பிக்கப்பட்ட வரைவு கடலோர மண்டல மேலாண்மை திட்ட வரைபடங்கள்
மற்றும் நில பயன்பாட்டு வரைபடங்கள மீது பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம், மாவட்ட
ஆட்சியரின் உத்தரவின் பேரில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தால் 26.8.2023 காலை 10
மணியளவில் எஸ்.எஸ் ஆடிட்டோரியம், பள்ளி தெரு, குளச்சல், கன்னியாகுமரி மாவட்டத்தில்
நடைபெற இருந்தது.
தற்போது, தேசிய பசுமை தீர்ப்பாயம் (தெற்குமண்டலம்) 0.ANo. 101/2023 என்ற
18.8.2023 நாளிடப்பட்ட
வழக்கில்
ஆணையின் வாயிலாக மாநில கடற்கரை மண்டல
மேலாண்மை ஆணையத்திற்காக தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தால் நடத்தப்படவிருந்த
பொதுமக்கள் கருத்துகேட்பு கூட்டத்தை நிறுத்திவைக்க உத்தரவிட்டுள்ளது.
மேற்படி
ஆணையின்
படி, 26-8-2023 காலை 10 மணியளவில்
தி/ள். S.S. ஆடிட்டோரியம், பள்ளி தெரு, குளச்சல், கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற இருந்த பொதுமக்கள்
கருத்துகேட்புக் கூட்டம் மறு தேதி குறிப்பிடும் வரை
ஒத்திவைக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர்,
தெரிவித்துள்ளார்.