கன்னியாகுமரி மாவட்டம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் சார்பில்
மாவட்ட ஆட்சியர் அலுவலக முகப்பில் நடைபெற்ற மாவட்ட
அளவிலான போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டியினை
மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் கொடியசைத்து துவக்கி
வைத்து தெரிவிக்கையில்-
தமிழ்நாடு அரசின் ஆணைங்கிணங்க கன்னியாகுமரி மாவட்டத்தில்
போதைப்பழக்கத்தை தடுக்கும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று
வருகிறது. குறிப்பாக பள்ளிக் கல்லூரி மாணவர்கள் போதைப்பொருட்கள் உட்கொள்வதை
அறியும் பட்சத்தில் அவர்கள் அப்பழகத்திலிருந்து விடுப்படுவதற்கு உளவியல் ரீதியாக
பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் பள்ளிக்கல்லூரிகளின் முதல்வர்கள் மற்றும் பேராசிரியர்கள், அரசு தனியார்
பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் தங்களின் கீழ் பயிலும் மாணவ
மாணவியர்களின் நடத்தைகளை உன்னிப்பாக கவனிக்க வேண்டும். பள்ளிக்கல்லூரிகள்
அருகாமையில் உள்ள கடைகளை கண்காணிக்க வேண்டும். பெற்றோர்களும் தங்களின்
குழந்தைகளின் நடவடிக்கைகளை தெரிந்து கொள்ள வேண்டும். மாவட்ட நிர்வாகம்
போதைப்பொருட்களை தடுக்கும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி
வருகிறது.
அதனடிப்படையில் பள்ளிக்கல்லூரி மாணவ மாணவியர்கள் மற்றும்
தன்னார்வலர்களுக்கான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி துவக்கி வைக்கப்பட்டு உள்ளது.
போட்டியானது ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கி கன்னியாகுமரி காந்தி மண்டபத்தின்
அருகில் முடிவடைகிறது.
முதல் பரிசு பெறும் வீரர் வீராங்கனைகளுக்கு ரூ.10,000 ரொக்கப்பரிசும்,
சான்றிதழ்களும், 2ம் பரிசு பெறும் வீரர் வீராங்கனைகளுக்கு ரூ.5,000 ரொக்கப்பரிசும்,
சான்றிதழ்களும், 3ம் பரிசு பெறும் வீரர் வீராங்கனைகளுக்கு ரூ.3,000 ரொக்கப்பரிசும்,
சான்றிதழ்களும், 10 நபர்களுக்கு ஆறுதல் பரிசாக தலா ரூ.1000 ரொக்கப்பரிசும்,
சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளது என்பதை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு
மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் உதவி ஆணையர் (கலால்) லொரைட்டா, போக்குவரத்து துறை துணை மேலாளர் கரோலின், திருப்புமுனை
போதை நோய் நலப்பணி இயக்குநர் முனைவர் அருட்பணி நெல்சன்,
ரோஜா வனம் இயக்குநர்கள் அருள் ஜோதி, அருள் கண்ணன், போதையில்லா
இந்திய திட்ட உறுப்பினர்கள், முதன்மை பயிற்சி பெறுநர்கள், தன்னார்வலர்கள், மாணவ உட்பட பலர் கலந்து கொண்டனர்.