கன்னியாகுமரி மாவட்டம் மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலயத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானவர்கள் வந்து செல்கின்றனர். இந்த பகுதியில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இந்த ஆலய பகுதிக்கு வந்து செல்வதற்கு கடந்த சில ஆண்டுகளாக பஸ் வசதிகள் இல்லாத நிலை இருந்து வந்தது. இந்த நிலையில் வில்லுக்குறி திங்கள் நகர் செல்லும் மினி பஸ்சை மாடத்தட்டுவிளை ஆலயம் பகுதியாக இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு பஸ் இயக்கப்படுகிறது. இந்த மினி பஸ் இயக்கத்தை மாடத்தட்டுவிளை பங்குத்தந்தை அருட்பணி மரிய இராஜேந்திரன் செபம் செய்து அர்ச்சித்து துவக்கி வைத்தார். இணை பங்குத்தந்தை அருட்பணி அருள் வினிஸ் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.