
நாகர்கோவில் – திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலை எப்போதும் பரபரப்பாகவே காணப்படும். இந்த நிலையில் சம்பவத்தன்று மீன் டெம்பே ஒன்று இந்த வழியாக சென்றது. சுங்கான்கடையில் சென்ற போது எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த மினி டெம்போ ரோட்டில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. டெம்போ ரோட்டில் கவிழ்ந்ததால் இருபுறமும் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. சம்பவம் குறித்து இரணியல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ரோட்டில் மீன் டெம்பே கவிழ்ந்த சம்பவத்தால் சுங்கான்கடை தேசிய நெடுஞ்சாலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.