உலக புகையிலை தினம்

Share others

உலக புகையிலை தவிர்ப்பு தின சிறப்பு விழிப்புணர்வு நிகழ்வை குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கன்னியாகுமரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் வழிகாட்டுதலோடு மாவட்ட போதை விழிப்புணர்வு அமைப்புகள் இணைந்து போதையில்லாத கன்னியாகுமரி மாவட்டம் என்ற முனைப்போடு நாகர்கோவில் ஹோலி கிறாஸ் கல்லூரியின் பல்நோக்கு அரங்கில் வைத்து சிறப்பித்தனர்.

இன்று புகையிலை போதையினால் மாணவர் மற்றும் மக்கள் சமுதாயம் மிகவும் பாதிக்கப்பட்டுகின்ற அவலநிலையில் இருந்து போதையில்லாத கன்னியாகுமரி மாவட்டத்தை உருவாக்குவோம் என்ற முனைப்பில் சவால்களில் வழிகாட்டும் உளநலமுறைகள் பட்டயப் பயிற்சிபெறுநர்கள் 300 பேர் ஆர்வமுடன் போதை விழிப்புணர்வு நிகழ்வில் பங்கேற்றனர்.

கன்னியாகுமரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி சகிலா பானு போதை விழிப்புணர்வு உரை எல்லோரையும் சிந்திக்க வைத்தது மட்டுமல்லாமல் போதை சார்ந்த மாவட்ட அளவிலான செயல்பாட்டுக்கும் தூண்டியது.

புகையிலை போதைக்கெதிரான உறுதிமொழி எடுத்தலை இயேசுசபை போதைநோய் பணிக்குழுவின் நிர்வாகி சகாய பிராங்கோ முன்னின்று நடத்தினார்.

அன்று தான் போதையினால் பட்ட அவதிகளையும், இன்று போதையை விட்டுவிலகி வாழ்கின்றபோது அனுபவிக்கின்ற மகிழ்ச்சியையும் சகாய சிந்தன் உணர்வுபூர்வமாக பகிர்ந்து கொண்டார்.

அன்று தன் கணவர் போதையில் தவித்தபோது தானும், தனது குடும்பமும் அடைந்த கஷ்டங்களையும், இன்று கணவர் போதையைத் தவிர்த்து வாழும்போது குடும்பத்தில் தவழ்கின்ற ஆனந்தத்தையும் ஜெயராணி நெஞ்சம் நெகிழும் வண்ணம் பகிர்ந்து கொண்டார்.

போதைநோய் நலப்பணியின் மறைமாவட்ட இயக்குநர் பணி குணபால் ஆராச்சி போதைசார் தெளிவுகளைக் கொடுத்தார். போதைநோய் நலப்பணியின் மறைமாவட்ட தலைவர் மரிய ஜாண் சந்திராவும் குழுவினரும் பங்கேற்பாளர்கள் போதை விழிப்புணர்வு நிகழ்வில் அணிந்து கொள்ள போதைவிழிப்புணர்வு டிஷர்ட் மற்றும் தொப்பி வழங்கினார்கள்

இந்த சிறப்பு புகையிலை போதை விழிப்புணர்வு நிகழ்வை கன்னியாகுமரி மாவட்ட அரசின் குழந்தைகள் பாதுகாப்பு அலகின் அதிகாரி சகிலா பானு அவர்களுடன் இணைந்து கன்னியாகுமரி மாவட்ட போதை விழிப்புணர்வு அமைப்புகளின் ஒருங்கிணைப்பாளரும் ஆற்றுப்படுத்துதல் பணியின் இயக்குநருமாகிய டாக்டர் பிரான்சிஸ் சேவியர் நெல்சன்
ஏற்பாடு செய்திருந்ததார்.

இந்த புகையிலை போதை விழிப்புணர்வு நிகழ்வு மக்கள் எல்லோரும் புகையிலையை தவிர்த்து வாழவும், சமூக அமைப்புகள் புகையிலை புழக்கதையை தடுத்து நிறுத்தவும், அரசு புகையிலையைத் தடை செய்யவும் வேண்டியதன் கட்டாயத்தை உணர்ந்து கொண்டதாக பங்கேற்பாளர்கள் மனந்திறந்து கூறினார்கள்.


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *