குளுமைக்காடு ஸ்ரீமன் நாராயணசுவாமி திருக்கோயில் திருநாள் அழைப்பு

Share others

வில்லுக்குறி குளுமைக்காடு ஸ்ரீமன் நாராயணசுவாமி திருக்கோயில் அய்யா அருளிய அகிலத்திரட்டு அம்மானை திருஏடு வாசிப்பு திருநாள் அய்யா நிச்சயித்தபடி வடக்கு வாசல் தியான மண்டபம் திருபதம் சார்த்தல் திருக்கொடியேற்ற திருநாள் மே மாதம் ஒன்றாம் தேதி முதல் 12 ம் தேதி வரை நடக்கிறது. விழாவின் முதல் நாள் காலை 5 மணிக்கு பணிவிடை, 6 மணிக்கு வடக்கு வாசல் தியான மண்டபம் திருபதம் சாற்றுதல், 6.30 மணிக்கு திருக்கொடியேற்றுதல், 8 மணிக்கு அய்யா வாகனத்தில் தெருவீதி வலம் வருதல், 11.30 மணிக்கு பணிவிடை மதியம் 12 மணிக்கு உச்சிப்படிப்பு, 1 மணிக்கு அன்ன தருமம் மாலை 3.30 மணிக்கு பணிவிடை, 4 மணிக்கு அகிலத்திரட்டு திருஏடு வாசித்தல், 5.30 மணிக்கு வெளிச்ச வேள்வி, இரவு 7 மணிக்கு அகிலத்திரட்டு திருஏடு வாசித்தல், 9 மணிக்கு அய்யா வாகனத்தில் தெருவீதி வலம் வருதல், உகப்படிப்பு, 9.30 மணிக்கு அன்னதருமம், 10 மணிக்கு வெளிச்ச வேள்விக்கான பரிசு வழங்குதல் நடக்கிறது. 2 ம் நாள் விழாவில் காலையில் பணிவிடை, துவையல் தவசு, மதியம் உச்சிப்படிப்பு, அன்னபால் தருமம், மாலையில் பணிவிடை, அகிலத்திரட்டு திருஏடு வாசித்தல், இரவில் அய்யா வாகனத்தில் தெருவீதி வலம் வருதல், உகப்படிப்பு, அன்னதருமும் நடக்கிறது. 3 ம் நாள் விழாவில் காலை 8 மணிக்கு அகிலத்திரட்டு தருமப்பள்ளி மாணவ மாணவியர்களுக்கான பண்பாட்டுப் போட்டிகள், மதியம் 12 மணிக்கு உச்சிப்படிப்பு, 2 மணிக்கு அகில அரங்கம் பரிசளிப்பு விழா, மாலை 3:30 மணிக்கு பணிவிடை, 4 மணிக்கு அகிலத்திரட்டு திருஏடு வாசித்தல், இரவு 8:30 மணிக்கு அய்யா வாகனத்தில் தெருவீதி வலம் வருதல், 9 மணிக்கு உகப்படிப்பு தொடர்ந்து அன்னதருமம் நடக்கிறது. 4 ம் நாள் விழாவில் காலையில் பணிவிடை, துவையல் தவசு, மதியம் உச்சிப்படிப்பு, அன்னபால் தருமம், மாலையில் பணிவிடை, அகிலத்திரட்டு திருஏடு வாசித்தல், இரவு அய்யா வாகனத்தில் தெருவீதி வலம் வருதல், உகப்படிப்பு, அன்னதருமம் 9:30 மணிக்கு தருமப்பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. 5 ம் விழாவில் காலையில் பணிவிடை, துவையல் தவசு, மதியம் உச்சிப்படிப்பு, அன்னபால் தருமம், மாலையில் பணிவிடை, அகிலத்திரட்டு திருஏடு வாசித்தல், இரவு 7 மணிக்கு அய்யா வைகுண்ட நாதனுக்கு ஊஞ்சல் வைபவ தாலாட்டு, 8.30 மணிக்கு அய்யா வாகனத்தில் தெருவீதி வலம் வருதல் 9 மணிக்கு உகப்படிப்பு தொடர்ந்து அன்னதருமம் நடக்கிறது. 6 மற்றும் 7 ம் நாள் விழா நாட்களில் காலையில் பணிவிடை, துவையல் தவசு, மதியம் உச்சிப்படிப்பு, அன்னபால் தருமம், மாலையில் பணிவிடை, அகிலத்திரட்டு திருஏடு வாசித்தல், இரவு அய்யா வாகனத்தில் தெருவீதி வலம் வருதல், உகப்படிப்பு, அன்னதருமம் நடக்கிறது. 8 ம் நாள் விழாவில் காலையில் பணிவிடை, துவையல் தவசு, மதியம் உச்சிப்படிப்பு, அன்னபால் தருமம், மாலையில் பணிவிடை, 4 மணிக்கு நாதஸ்வர கச்சேரி, 5 மணிக்கு அகிலத்திரட்டு திருஏடு வாசித்தல், 6 மணிக்கு சங்கு மணி ஒலிக்க பக்தர்கள் பதியை வலம் வந்து அய்யாவுக்கு சுருள் சமர்ப்பித்தல், இரவு 7.30 மணிக்கு திருக்கல்யாண திருஏடு வாசிப்பு, 8.30 மணிக்கு அய்யா குதிரை வாகனத்தில் எழுந்தருளி கலி வேட்டையாடுதல், 9 மணிக்கு பெரிய உகப்படிப்பு, 9.30 மணிக்கு அன்னதருமம் நடக்கிறது. 9 ம் நாள் விழாவில் காலையில் பணிவிடை, துவையல் தவசு, மதியம் உச்சிப்படிப்பு, அன்னபால் தருமம், மாலையில் பணிவிடை, அகிலத்திரட்டு திருஏடு வாசித்தல், இரவு அய்யா வாகனத்தில் தெருவீதி வலம் வருதல், உகப்படிப்பு, அன்னதருமம் நடக்கிறது. 10 ம் நாள் விழாவில் காலையில் பணிவிடை, துவையல் தவசு, 8 மணிக்கு அகிலத்திரட்டு திருஏடு வாசித்தல், மதியம் உச்சிப்படிப்பு, 1 மணிக்கு அன்னதருமம், 2.30 மணிக்கு தேவர் அபயம், மாலை 3 மணிக்கு அய்யா வாகனத்தில் எழுந்தருளி ஊர் வலம் வருதல் முத்துக்குடை, அலங்காரம், மேளம் அணிவகுக்க அன்பர்கள் மகா மந்திரம் ஒலிக்க கோயிலில் இருந்து புறப்பட்டு மணக்கரை சந்திப்பு புதுகாட்டுவிளை, வில்லுக்குறி வெள்ளச்சிவிளை வழியாக கோயிலை வந்தடையும். இரவு 8.30 மணிக்கு அன்னதருமம் நடக்கிறது. 11 ம் நாள் விழாவில் காலையில் பணிவிடை, துவையல் தவசு, 11 மணிக்கு அய்யா வாகனத்தில் தெருவீதி வலம் வருதல், மதியம் 1 மணிக்கு அன்னதருமம், இரவு 7.30 மணிக்கு அய்யா வழி இன்னிசை கச்சேரி நடக்கிறது. 12 ம் நாள் விழாவில் காலை 3 மணிக்கு அய்யா வாகனத்தில் தெருவீதி வலம் வருதல், 3.30 மணிக்கு பணிவிடை, 4 மணிக்கு கொடி இறக்குதல், 4.30 மணிக்கு பள்ளி உணர்த்தல், 5 மணிக்கு அன்னதருமம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை ஊர் நிர்வாகம் மற்றும் பொதுமக்கள், தலைவர் முத்துகிருஷ்ணன், துணைத் தலைவர் செந்தில், செயலாளர் அருள்தாஸ் ஆகியோர் இணைந்து செய்து வருகின்றனர்.


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *