தென்காசி மாவட்டத்தை சேர்ந்த சமூக ஆர்வலருக்கு பசுமைத் தூதர் விருது

Share others

தென்காசி மாவட்டத்தை சேர்ந்த சமூக ஆர்வலருக்கு பசுமைத் தூதர் விருது

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலுகா குமந்தாபுரம் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் லயன் அல்லை   அர்சுனன். இவர் கடையநல்லூர் நகராட்சி சுகாதாரத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற முன்னாள் பணியாளர்  ஆகும். இவர் தற்போது தென்காசி மாவட்டம் நல் உள்ளம் அறக்கட்டளைகளியின் தலைவராக இருந்து  பல செயல்பாடுகளை  செயல்படுத்தி வருகிறார்.  கவுரவ டாக்டர் பட்டம் பெற்ற இவர் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை சாலை ஓரங்கள், நீர்நிலை ஓரங்கள் , கல்விநிலைய வளாகங்கள் போன்றவற்றில் நட்டு , பாதுகாத்து , பராமரித்து வருகின்றார். ரோட்டரி , லயன்ஸ் , ஜேசீஸ் போன்ற பல்வேறு அமைப்புக்களாலும் பாராட்டி , கவுரவிக்கப்பட்ட சுற்றுச்சூழல் ஆர்வலரான அர்சுனனுக்கு  கடையநல்லூரில் நடந்த அல்லையன்ஸ் கிளப்ஸ் இன்டர் நேஷனல் மாவட்ட நிகழ்வுகளில் பசுமைத் தூதர் - 2026  விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார்.

Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *