தேசிய மருத்துவர்கள் தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

Share others

தேசிய மருத்துவர்கள் தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார்


தேசிய மருத்துவர்கள் தினத்தையொட்டி நாடு முழுவதும் உள்ள மருத்துவர்களுக்கு பிரதமர்  நரேந்திர மோடி  வாழ்த்து தெரிவித்து உள்ளார். நாட்டின் மீதான அவர்களுடைய உறுதிப்பாடு கருணை, இணையற்ற சேவை ஆகியவற்றுக்கு பாராட்டுத் தெரிவித்து உள்ளார்.

மருத்துவர்களின் கடின உழைப்பு, கருணை, அர்ப்பணிப்பு ஆகியவை இந்தியாவின் சுகாதார அமைப்பின் முதுகெலும்பாக திகழ்கின்றன என்று  பிரதமர் நரேந்திர மோடி கூறி உள்ளார். மிகவும் சவால்மிக்க சூழல்களிலும், அவர்களுடைய அயராத முயற்சிகள் நாட்டில் உள்ள எண்ணற்ற மக்களின் நம்பிக்கையையும் பாராட்டுக்களையும் பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டு உள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளில் சுகாதாரத்துறையில் ஏற்பட்டு உள்ள முன்னேற்றம் குறித்து குறிப்பிட்டு உள்ள பிரதமர், சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்துவதில் நாடு பெரும் முன்னேற்றம் அடைந்து உள்ளதாக கூறி உள்ளார். நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை, இரண்டு மடங்கிற்கும் மேலாக அதிகரித்து உள்ளதையும் இளநிலை, முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான இடங்கள் அதிகரிக்கப்பட்டு உள்ளதையும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.  இந்த முன்னெப்போதும் இல்லாத வளர்ச்சி மருத்துவராக விரும்புவோருக்கு பெரும் வாய்ப்புகளை ஏற்படுத்துவதோடு சுகாதாரத்துறைப் பணியாளர்களின் எண்ணிக்கையை வலுப்படுத்துவதையும் நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் தரமான மருத்துவ சேவை கிடைப்பதை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டு உள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஆபரேஷன் அமிஸ்டாட் நடவடிக்கையின் ஒரு பகுதியாக வெனிசுலாவில் பணிபுரியும் இந்திய மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களின் அர்ப்பணிப்பையும் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டி உள்ளார். சவால்மிக்க தருணங்களில் அவர்களுடைய தன்னலமற்ற சேவை, சமூகம் நெருக்கடிகளை எதிர்கொள்ளும்போது சுகாதாரத் துறையைச் சேர்ந்தவர்கள், எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதை எடுத்துக்காட்டுவதாக அவர் தெரிவித்தார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் நரேந்திர மோடி பதிவிட்டு இருப்பதாவது:

கடின உழைப்பு, கருணை, அர்ப்பணிப்பு ஆகியவற்றின் மூலம் இந்தியாவின் சுகாதார அமைப்பிற்கு முதுகெலும்பாக திகழும் நம்முடைய அர்ப்பணிப்புமிக்க மருத்துவர்களுக்கு மருத்துவர்கள் தின வாழ்த்துகள்.  மிகவும் சவால்மிக்க சூழல்களிலும், அவர்களுடைய அயராத முயற்சிகள் நாட்டில் உள்ள எண்ணற்ற மக்களின் நம்பிக்கையையும் பாராட்டுக்களையும் பெற்று உள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் நமது  சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்துவதில் இந்தியா பெரும் முன்னேற்றம்  அடைந்து உள்ளது. நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை, இரண்டு மடங்கிற்கும் மேலாக அதிகரித்து உள்ளது, அதே வேளையில் இளநிலை, முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான இடங்களும் அதிகரிக்கப்பட்டு உள்ளது. இந்த முன்னெப்போதும் இல்லாத வளர்ச்சி மருத்துவராக விரும்புவோருக்கு பெரும் வாய்ப்புகளை ஏற்படுத்துவதோடு சுகாதாரத்துறைப் பணியாளர்களின் எண்ணிக்கையை வலுப்படுத்துவதையும் நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் தரமான மருத்துவ சேவை கிடைப்பதை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டு உள்ளது.

வளர்ச்சியடைந்த இந்தியாவை
 கட்டமைப்பதையொட்டி, நாம் பணியாற்றும் சூழலில், நோய்த்தடுப்பை மேம்படுத்துவதிலும், மருத்துவ ஆராய்ச்சியை முன்னெடுப்பதிலும், புதுமைக் கண்டுபிடிப்பை பின்பற்றுவதிலும்  அனைவருக்கும் சுகாதார வசதிகள் எளிதில் கி்டைப்பதிலும் நமது மருத்துவர்கள் தொடர்ந்து முக்கியப் பங்காற்றுவார்கள்.

Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *