நாடார் மகாஜன சங்கம் சார்பில் கன்னியாகுமரி மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டி

Share others

நாடார் மஹாஜன சங்கம் சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி

7 ம் தேதி நடக்கிறது




நாடார் மஹாஜன சங்கம் சார்பில் பெருந்தலைவர் காமராஜர் 124 வது பிறந்த நாள் கல்வித் திருவிழா கன்னியாகுமரி மாவட்ட அளவிலான அனைத்து பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி நாகர்கோவில் பழவிளை காமராஜர் தொழில்நுட்ப கல்லூரியில் வைத்து ஜூலை மாதம் 7 ம் தேதி காலை 8 மணி முதல் நடக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு நாடார் மஹாஜன சங்கம் பொதுச் செயலாளர் கரிக்கோல்ராஜ் தலைமை வகிக்கிறார். 6,7,8 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கான தலைப்பு பசிபிணி போக்கிய கல்வி கடவுள் அல்லது தியாகசீலர் காமராஜர் என்ற தலைப்பில் பேசலாம் . இவர்களுக்கு கொடுக்கப்பட்டு உள்ள நேரம் 4  நிமிடம் ஆகும். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசு ரூ. 7000, இரண்டாம் பரிசு ரூ. 5000, மூன்றாம் பரிசு ரூ. 3000 ஆகும். 9,10 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கான தலைப்பு காமராஜரின் சொல்லும் செயலும் அல்லது உழவும் தொழிலும் வளர்த்த உத்தம தலைவர் என்ற தலைப்பில் பேசலாம் . இவர்களுக்கு கொடுக்கப்பட்டு உள்ள நேரம் 5 நிமிடம் ஆகும். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசு ரூ. 7000, இரண்டாம் பரிசு ரூ. 5000, மூன்றாம் பரிசு ரூ. 3000 ஆகும். 11,12 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கான தலைப்பு  சமதர்ம சமுதாயம் கண்ட காமராஜர் அல்லது காமராஜரின் அரசியல் பணியும் ஆட்சி பணியும் என்ற தலைப்பில் பேசலாம் . இவர்களுக்கு கொடுக்கப்பட்டு உள்ள நேரம் 5 நிமிடம் ஆகும். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசு ரூ. 7000, இரண்டாம் பரிசு ரூ. 5000, மூன்றாம் பரிசு ரூ. 3000 ஆகும். நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும். இதற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் முருகன்,  ஒருங்கிணைப்பாளர் தனபால், ஒருங்கிணைப்பாளர் ஐசக் சாம்ராஜ், தலைமை ஒருங்கிணைப்பாளர் அவனி மாடசாமி, ஒருங்கிணைப்பாளர் விவேகானந்தன், மாநகர செயலாளர் மதன்குமார் மற்றும் பழவிளை காமராஜர் தொழில்நுட்ப  கல்லூரி நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் செய்து உள்ளனர்.

Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *