பள்ளி செல்லும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் வாழ்த்து

Share others

இந்த கல்வி ஆண்டின் முதல் நாள் வகுப்பிற்கு செல்லும் மாணவ மாணவிகள் அனைவருக்கும் கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை சார்பாக வாழ்த்துக்கள்.
தடை செய்யப்பட்ட நேரத்தில் கனரக வாகனங்களை இயக்கி பள்ளி குழந்தைகளின் பாதுகாப்புக்கு இடையூறு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.ஸ்டாலின் எச்சரித்து உள்ளார்.
கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், பள்ளி செல்லும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஸ்டாலின் தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார்.
மாணவர்களின் பாதுகாப்பே முதன்மை என்ற நோக்கில், பள்ளி தொடங்கும் நேரங்களில் சாலைகளில் ஏற்படக் கூடிய போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்து அபாயங்களைத் தவிர்க்கும் வகையில், காலை 8 மணி முதல் 10 மணி வரை அதேபோல் மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரை நகர்ப்புற பகுதிகளுக்குள் கனரக வாகனங்கள் நுழைய அனுமதிக்கப்படாது என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது.
தடை செய்யப்பட்ட நேரத்தில் கனரக வாகனத்தை இயக்குபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் எச்சரித்து உள்ளார்.


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *