கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் முன்னேற்ற சங்க பொதுக்குழு கூட்டம் வில்லுக்குறி சிஎஸ்ஐ சர்ச் அருகில் உள்ள தலைவர் இல்லத்தில் வைத்து தலைவர் ஜெபர்சன் ஞான தேவ் தலைமையில் நடந்தது. துணை செயலாளர் மகா லெட்சுமி சங்க செயல்பாடு அறிக்கை வாசித்தார். துணைத் தலைவர் தங்கமரியான் வரவு செலவு கணக்கு வாசித்தார். வேளாண்மை துணை அலுவலர் வினு வேளாண்மை பயிர் காப்பீடு மற்றும் விதை சான்று பெறுவது பற்றியும் விளக்கி பேசினார். செயலாளர் மனோகரன் நன்றி கூறினார். இணை தலைவர் ராமசாமி பிள்ளை, பகவதி பிள்ளை, திரேசம்மாள், ஜோதி, சரஸ்வதி , அல்போன்சா, ஜெபா, பிரசாத், ஜாண் சந்தோஷ் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஜோசப் விஜய் பதிவியேற்றதற்கு சங்கம் சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. ஜூன் 1 ம் தேதி கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் பயன்பாட்டுக்காக அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விட ஆணை வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. வில்லுக்குறி குருசடி ஜங்ஷனில் தக்கலைக்கு பஸ்சில் செல்ல பயணிகள் நிற்கும் பஸ் ஸ்டாப்பில் பயணிகள் நிழற்குடை அமைத்து தர கேட்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
பொதுக்குழு கூட்டம்
