முரசங்கோடு கியூரியா துவக்க விழா

Share others

குழித்துறை மறை மாவட்டம் முளகுமூடு மரியாவின் சேனை தூய விமலின் அன்னை கொமித்சியத்தின் புதிய முரசங்கோடு கியூரியா தொடக்கவிழா  நடந்தது. விழாவில் மரியாயின் சேனையினர் நெய்யூர் மருத்துவமனையில் இருந்து ஜெபமாலை பவனி வந்தனர். கொமித்சிய ஆன்ம இயக்குனர் அருட்பணி டோமிலிலில் ராஜா முன்னிலையில் முரசங்கோடு புனித கார்மல் அன்னை ஆலயம் வந்த பவனிக்கு இறைமக்கள் சிறப்பான வரவேற்பு வழங்கினர்.
‎தொடர்ந்து குழித்துறை மறை மாவட்ட மேதகு ஆயர் ஆல்பர்ட் அனஸ்தாஸ் தலைமையில் முரசங்கோடு ஆலயத்தில் வைத்து சிறப்பு திருப்பலியும் முரசங்கோடு  கியூரியா தொடக்க விழாவும் நடந்தது. தொடக்க விழாவில் முரசங்கோடு கியூரியா உறுப்பினர்கள் இறைவேண்டல் செய்தனர். மறை மாவட்ட முதன்மை செயலாளர் அருட்பணி அந்தோணி  முத்து, ரீஜியா தலைவர் தொபியாஸ் டோனி, ரீஜியா ஆன்ம இயக்குனர் பஸ்காலிஸ், முன்னாள் ரீஜியா தலைவர் யூஜின் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மேதகு
ஆயர் ஆல்பர்ட் அனஸ்தாஸ் கியூரியா நிர்வாகிகளுக்கு பொறுப்புகளை வழங்கி வாழ்த்தினார். புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்றுக் கொண்டனர். முளகுமூடு கொமிசிய தலைவர் சேவியர் சிலுவை தாசன், துணை தலைவர் பிரின்ஸ் ராஜன், செயலாளர் சபின்ரோஸ், துணை செயலாளர் டேவிட்ராஜ், பொருளாளர் ஜெயக்குமார் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

‎

‎




‎
‎



‎

‎

Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *