கொன்னக்குழிவிளை தொன்போஸ்கோ இளைஞர் இயக்கம் மற்றும் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கோதநல்லூர் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து நடத்தும் ரத்ததான முகாம் மற்றும் பொது மருத்துவ முகாம் கொன்னக்குழிவிளை வியத்தகு வியாகுல அன்னை ஆலய திருவிழாவை முன்னிட்டு நடந்தது. இந்த முகாமை பங்குத்தந்தை அருட்பணி ஜியோ தலைமை வகித்து துவக்கி வைத்தார். பங்கு அருட்பணி பேரவை துணைத் தலைவர் ஜாண் ராஜ், பொருளாளர் ஜோஸ்பின் ஆல்வின், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ரத்த வங்கி மருத்துவ அலுவலர் டாக்டர் ராகேஷ், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அனீஷ், டாக்டர் ஷெர்லின், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் செல்வன், நடமாடும் மருத்துவக் குழு டாக்டர் தர்ஷின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வியாகுல அன்னை தொழிலாளர் சங்க தலைவர் அகஸ்டின் ஆன்றனி ராஜன் வரவேற்றார். தொன்போஸ்கோ இளைஞர் இயக்க தலைவர் பெமில், துணைத் தலைவர் அஸ்மி, செயலாளர் ரீமா, துணை செயலாளர் ஆன்றன் சுமித், பொருளாளர் ஆக்னஸ், மற்றும் ஜெயசிங், அருள் ராய், சலோமோன், ஜோசப்ராஜ், ஸ்டார்லின், வழக்கறிஞர் கிறிஸ்டோபர், ஐமோஸ் உட்பட பங்கு இறைமக்கள், தொன்போஸ்கோ இளைஞர் இயக்க உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.