மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலய திருவிழா திருப்பலிக்கு வருகை தந்த குழித்துறை மறைமாவட்ட புதிய ஆயர் மேதகு ஆல்பர்ட் ஜார்ஜ் அலெக்ஸாண்டர் அவர்களுக்கு பங்குத்தந்தை அருட்பணி ஜெயக்குமார் தலைமையில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இணை பங்குத்தந்தை பிரவின் தாஸ், பங்கு அருட்பணி பேரவை துணைத்தலைவர் எட்வின் சேவியர் செல்வன், செயலாளர் ராணி ஸ்டெல்லா பாய், இணை செயலாளர் ஜோஸ் வால்டின், பொருளாளர் லூக்காஸ் மற்றும் அருட்பணியாளர்கள், பங்கு இறைமக்கள் கலந்து கொண்டனர்.