கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த கனமழையின் காரணமாக மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் மாவட்ட ஆட்சியாளர் அழகு மீனா இன்று ( 25 ம் தேதி) விடுமுறை அறிவித்தார். இதனால் பள்ளி மாணவ, மாணவிகள் வீடுகளில் இருந்து வருகின்றனர். மாவட்ட ஆட்சியாளர் அழகு மீனா மாவட்டத்தில் பெய்து வரும் மழை பகுதிகளில் நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார்.