கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வு

Share others

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக முகப்பில் நடைபெற்ற தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி பொதுபார்வையாளர் அபுபக்கர் சித்திக், பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி பொதுபார்வையாளர் பிரியங்கா பாசு இங்டி, விளவங்கோடு சட்டமன்ற தொகுதி பொதுபார்வையாளர் ஓம் பிரகாஷ் ராய், கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி பொதுபார்வையாளர் சுபாஸ்ரீ நந்தா, கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி பொதுபார்வையாளர் மனிஷா சென்டியா, காவல் பொதுபார்வையாளர் சுபாஷ் சந்திர துபே, கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின், உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு, வாக்காளர் உறுதிமொழி சான்றிதழை வழங்கினார்கள்.
இந்திய தேர்தல் ஆணையத்தால் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் வரும் 23.4.2026 அன்று நடைபெற உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் 15,20,338 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். கடந்த தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்ததைத் தொடர்ந்து வரும் சட்டமன்ற தேர்தலில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்கும் விதமாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக வாக்குசதவீதம் குறைந்த சட்டமன்ற தொகுதிகளில் அதிகப்படியான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தபட்டு வருகிறது.
அதன்ஒருபகுதியாக கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து வாக்காளர்களும் உறுதிமொழி எடுக்க கியூஆர் கோடு உருவாக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டது.
அதில் தேர்தல் நாளன்று மக்காளட்சியின் மீது பற்றுடைய இந்திய குடிமக்களாகிய நாம் நம்முடைய நலன்கருதும் மரபுகளையும், சுதந்திரமான, ஞாயமான மற்றும் அமைதியான தேர்தல்களின் மாண்பையும் நிலை நிறுத்துவோம் என்றும் ஒவ்வொரு தேர்தலிலும் அச்சமின்றியும், மதம், இனம், சாதி, வகுப்பு, மொழி ஆகியவற்றின் தாக்கங்களுக்கு ஆட்படாமலும் அல்லது எந்தவொரு தூண்டுதலுமின்றியும் வாக்களிப்போம் என்ற உறுதிமொழியை கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் உறுதிமொழி எடுக்கும்பொருட்டு மாவட்ட தேர்தல் அலுவலர் கியூஆர் கோடு ஸ்கேன் செயலி அறிமுகப்படுத்தப்பட்டு அதன்வழி கல்லூரி மாணவ மாணவியர்கள், அரசு அலுவலர்கள், சுய உதவி குழு உறுப்பினர்கள் மற்றும் அனைத்து பொதுமக்களும் செல்பி புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் உறுதி மொழிகள் இன்று வரை 106122 எடுக்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டு உள்ளது.
இந்த தேர்தல் விழிப்புணர்வு உறுதிமொழி சாதனையை கொண்டாடும் வகையில் 106122 –வது உறுதிமொழி எடுத்த நபருக்கு சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டது. வாக்குரிமை பெற்ற அனைவரும் வரும் வியாழக்கிழமை (24.3.2026) அன்று தங்களது ஜனநாயக கடமையினை ஆற்ற கேட்டுக்கொள்ளப்பட்டது.
நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா, தேர்தல் விழிப்புணர்வு கண்காணிப்பு அலுவலர் மற்றும் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மைக்கேல் அந்தோணி பெர்னான்டோ, அலுவலர்கள், உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.
தேர்தல் திருவிழா தமிழ்நாட்டின் பெருவிழா


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *