கன்னியாகுமரி மாவட்டம் கொன்னக்குழிவிளை வியத்தகு வியாகுல அன்னை ஆலய திருவிழா ஆகஸ்ட் மாதம் 7 ம் தேதி முதல் 16 ம் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. விழாவின் முதல் நாள் காலை 5.30 மணிக்கு செபமாலை, 6 மணிக்கு முன்னோர்களுக்கான சிறப்பு திருப்பலி நடந்தது. மாலை 4.30 மணிக்கு அன்பிய திருக்கொடி பவனி, 5.30 மணிக்கு செபமாலை, புகழ்மாலை, திருப்பலி, 6.30 மணிக்கு காரங்காடு மறைவட்ட முதல்வர் அருட்பணி சகாய ஜஸ்டஸ் திருக்கொடியேற்றி வைத்தார். மறைமாவட்ட புதிய குருக்கள் அருட்பணியாளர்கள் ஜோர்வின் பிரின்ஸ், ஜெனீஷ், ஐசக் டேவிட், மொபின், அருள் சுரேஷ் ஆகியோர் தலைமை மற்றும் மறையுரையோடு நடந்தது. 8.30 மணிக்கு அன்பிய கலை இரவு நடந்தது.