இந்திய அஞ்சல்துறையின் சார்பில் சுதந்திர தினத்தை முன்னிட்டு
கன்னியாகுமரி கோட்ட அஞ்சலகங்களில் தேசியக்கொடி விற்பனை தொடக்கம்
நாட்டின் சுதந்திர தின விழாவை முன்னிட்டு, கன்னியாகுமரி கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து அஞ்சலகங்களிலும் தேசியக்கொடி விற்பனை தொடங்கப்பட்டு உள்ளது.
பொதுமக்கள், மாணவ-மாணவிகள் உள்ளிட்ட அனைவரும் தங்களது வீடுகளில் தேசியக்கொடியை ஏற்றி சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாடும் வகையில், அஞ்சலகங்களில் தேசியக்கொடிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளன.
கன்னியாகுமரி கோட்டத்திற்கு உட்பட்ட நாகர்கோவில் தலைமை அஞ்சலகம், தக்கலை தலைமை அஞ்சலகம் மற்றும் அனைத்து துணை அஞ்சலகங்களிலும் தேசியக்கொடிகள் பொதுமக்களுக்கு கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
தேசியக்கொடியின் விலை ரூ.25 ஆகும். பொதுமக்கள் அருகில் உள்ள அஞ்சலகங்களை அணுகி தேசியக்கொடிகளை பெற்றுக் கொள்ளலாம்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு பொதுமக்கள் அனைவரும் தேசியக்கொடியை வாங்கி, நாட்டுப்பற்றுடன் தங்கள் வீடுகளில் ஏற்றி விழாவை சிறப்பிக்குமாறு கன்னியாகுமரி கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் தீத்தாரப்பன் தெரிவித்து உள்ளார்.