வில்லுக்குறி பேரூராட்சி அலுவலகத்தில் உறுப்பினர்கள் உள்ளிருப்பு

Share others

வில்லுக்குறி முதல் நிலை பேரூராட்சி மன்ற சாதாரண கூட்டம் மதியம் 3.30 மணிக்கு நடப்பதாக அறிவிப்பு கொடுக்கப்பட்டு இருந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த
வில்லுக்குறி பேரூராட்சி துணைத் தலைவர் ராமலிங்கம் தலைமையில் 13 வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 14 உறுப்பினர்களும் சேர்ந்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் சரிதா, சுதா, தேவிகா, புஷ்பாகரன், எட்வர்ட் திலக், சுகிதா, ஆன்சிலா விஜிலியஸ், ஜோஸ்பின் புனிதா, வினோத், ரீனா , சுப்பிரமணியபிள்ளை, ஸ்டான்லி, கிரிஜாம்பிகா ஆகியோர் கலந்து கொண்டு தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *