75-ஆவது குடியரசு தின விழாவை முன்னிட்டு அஞ்சல் அலுவலகங்களில் தேசியக்கொடி விற்பனை.
நமது நாட்டின் 75-வது குடியரசு தின விழா வரும் 26-1-2024 அன்று கொண்டாடப்பட இருப்பதை முன்னிட்டு அஞ்சல் அலுவலகங்களில் தேசியக்கொடி விற்பனை முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. பொது மக்களும் சமூக ஆர்வலர்களும் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களும் அரசு மற்றும் தனியார் துறை அலுவலர்களும் வணிக நிர்வாகத்தினரும் எளிதாக மூவர்ணக்கொடியை வாங்கி பயன்பெறும் வகையில் கிராமப்புற அஞ்சல் அலுவலகங்கள் உட்பட அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் செய்யப்பட்டுள்ள இந்த சிறப்பு ஏற்பாட்டை அனைவரும் பயன்படுத்தி கொள்ளுமாறு கன்னியாகுமரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.