மத்திய மற்றும் மாநில அரசின் அனைத்து நலத்திட்டங்களையும் மற்றும் அஞ்சல் துறையின் அனைத்து திட்டங்களையும் ஒருங்கிணைக்கும் வகையில் அஞ்சல் சமூக வளர்ச்சி விழாவானது அஞ்சல் துறை சார்பில் வழுக்கம்பாறை முத்தாரம்மன் திருமண மண்டபத்தில் வைத்து நடந்தது. விழாவில் பரமேஸ்வரன், கன்னியாகுமரி அஞ்சலக உதவி கோட்ட கண்காணிப்பாளர் வரவேற்புரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தின் தலைவர் .மரியம்மா தாமஸ் கலந்துகொண்டு செல்வமகள் சேமிப்பு திட்ட பயனாளிகளுக்கும் மகளிர் மேன்மை சேமிப்பு பத்திர பயனாளிகளுக்கும் கணக்கு புத்தகங்கள் வழங்கினார். மேலும் ஐபிபிபி குழு விபத்து காப்பீட்டு திட்டத்தின் பயனாளிகளுக்கு காசோலையும் உள்ளூர் வணிகர்களுக்கு மெர்ச்சன்ட் கியூஆர் கோடு அட்டையும் வழங்கி சிறப்பித்தார். சமூகத்தின் வளர்ச்சியில் அஞ்சல் துறையின் பங்களிப்பு குறித்தும் அஞ்சல் துறையின் சேவைகள் சிறக்க ஒத்துழைப்பு நல்கி வரும் கிராம பஞ்சாயத்து தலைவர்கள், பிற பொதுத் துறை தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குறித்தும் சிறப்புரை வழங்கினார். செந்தில் குமார், கன்னியாகுமரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், வழுக்கம்பாறை பஞ்சாயத்து தலைவர் அனுசுயா, கன்னியாகுமரி மாவட்டத்தின் லயன்ஸ் கிளப் தலைவர் நல்லபெருமாள் பிள்ளை ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். நாகர்கோவில் கிழக்கு அஞ்சலக உப கோட்ட ஆய்வாளர் ஜாய்ஸ் நன்றியுரை வழங்கினார்
விழாவில் ஆதார் சிறப்பு முகாம், சிறுசேமிப்பு திட்டத்தில் பொதுமக்கள் இணைதல், மத்திய மாநில அரசின் நலத்திட்ட உதவிகளை இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் பேங்க் வழியாக பெறுவதற்கு கணக்குகள் தொடங்குதல், பிரதம மந்திரியின் ஓய்வூதிய திட்டம் மற்றும் காப்பீடு திட்டங்கள் தொடங்குதல், அஞ்சல் துறையின் அனைத்து சேவைகளை பற்றிய விவரங்களை மக்களுக்கு தெரிவித்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன.