கடிதம் எழுதும் போட்டி

Share others

இந்திய அஞ்சல் துறை, உலக அஞ்சல் சங்கம் நடத்தும் 2025 ஆம் ஆண்டிற்கான சர்வதேச கடிதம் எழுதும் போட்டியின் அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

9 முதல் 15 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் இந்த போட்டியில் பங்கேற்கலாம். போட்டியின் தலைப்பு:
நீங்கள் கடல் என்று கற்பனை செய்துகொண்டு, கடலை பாதுகாக்க தேவையான முக்கியத்துவம் மற்றும் முறைகளை மற்றவர்களுக்கு விளக்கும் கடிதம்.

இந்த கடிதமானது ஆங்கிலம் அல்லது இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 8வது அட்டவணையில் உள்ள மொழியில் எழுதப்பட வேண்டும். வெற்றியாளர்களுக்கு பணப் பரிசுடன் சான்றிதழும் வழங்கப்படும்.
வட்ட அளவில்:
முதலாம் பரிசு ரூ.25,000, இரண்டாம் பரிசு ரூ.10,000, மூன்றாம் பரிசு ரூ.5,000.
தேசிய அளவில்:
முதலாம் பரிசு ரூ.50,000, இரண்டாம் பரிசு ரூ.25,000, மூன்றாம் பரிசு ரூ. 10,000.
உலக அளவில்:
முதலாம் பரிசு:தங்கப் பதக்கம் மற்றும் சிறப்பு பரிசு
இரண்டாம் பரிசு: வெள்ளிப் பதக்கம் மற்றும் சிறப்பு பரிசு
மூன்றாம் பரிசு: செம்புப் பதக்கம் மற்றும் சிறப்பு பரிசு

பங்கேற்பதற்கான நடைமுறை:
போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் வயது ஆதாரம் மற்றும் மூன்று பாஸ்போர்ட் அளவிலான புகைப்படங்களுடன் கடிதத்தையும், விண்ணப்பத்தையும் தங்கள் பள்ளி வழியாக 15.3.2025 ஆம் தேதிக்குள் இந்த அலுவலகத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண்கள்:9442604383, 9080820107,9894774410 என்று கன்னியாகுமரி கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் செந்தில் குமார் தெரிவித்து உள்ளார்.


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *