பரசேரி திங்கள்நகர் சாலையை செப்பனிட கோரி நுள்ளிவிளை ஊராட்சி காங்கிரஸ் மேற்கு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் கண்டன்விளையில் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு நுள்ளிவிளை ஊராட்சி காங்கிரஸ் மேற்கு தலைவர் வின் வாஷிங்டன் தலைமை வகித்தார். செயல் தலைவர் பிரபு ரீகன், பொருளாளர் ஆன்றனி விஜூ, துணைத் தலைவர் ஸ்டெல்லா, வட்டார தலைவர் பால்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.டி. உதயம், குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். பேராசிரியர் சுந்தர்ராஜ், சகாய ராஜ், அந்தோணி முத்து, சாலமன், கென்னடி, பெலிக்ஸ் ராஜன், ஜெமினீஷ், அருள்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கண்டன்விளையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
