குழந்தை இயேசுவின் புனித தெரசா ஆலய நூற்றாண்டு விழா
கண்டன்விளை மண்ணின் அருட்பணியாளர்கள் இன்று (12 ம் தேதி) கவுரவிப்பு
கண்டன்விளை குழந்தை இயேசுவின் புனித தெரசா ஆலய நூற்றாண்டு விழாவையொட்டி கண்டன்விளை பங்கில் இருந்து இறை வாழ்வில் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட அருட்பணியாளர்கள் மற்றும் அருட்சகோதரிகளை கவுரவிக்கும் சிறப்பு நிகழ்ச்சி இன்று (12 ம் தேதி) நடைபெறுகிறது. கண்டன்விளை குழந்தை இயேசுவின் புனித தெரசா ஆலயத்தில் இன்று (12ம் தேதி) மாலை 6.30 மணிக்கு நடைபெறும் விழாவில் சிறப்பு திருப்பலி நடைபெறுகிறது. கண்டன்விளையை சேர்ந்தவரும் அகமதாபாத் மறைமாவட்ட ஆயருமான மேதகு அத்தனாசியுஸ் இரத்தினசாமி தலைமை வகிக்கிறார்.
வட்டம் பங்குதந்தையும் பண்டாரவிளை பங்கை சேர்ந்தவருமான அருட்பணி சகாயதாஸ் மறையுரை வழங்குகிறார். கண்டன்விளை மற்றும் அதன் கிளை பங்குகளான சித்தன்தோப்பு, பண்டாரவிளை, இரணியல் ஆகிய பங்குகளை சேர்ந்த அருட்பபணியாளர்கள், அருள் சகோதரிகள் சுமார் 60-க்கும் மேற்பட்டோர் நினைவுப் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட உள்ளனர். இந்த நிகழ்ச்சியை காரங்காடு வட்டார முதல்வரும், கண்டன்விளை பங்கு தந்தையுமான அருட்தந்தை சகாய ஜஸ்டஸ் ஒருங்கிணைக்கிறார். விழா ஏற்பாடுகளை கண்டன்விளை பங்கு அருட்பணி பேரவை துணைத் தலைவர் ஜஸ்டஸ், செயலாளர் ஐசக், பொருளாளர் வறுவேலாள், துணை செயலாளர் லில்லிமலர், பங்குப் பேரவை உறுப்பினர்கள், பங்கு இறைமக்கள், விழாக்குழுவினர் செய்து உள்ளனர் . விழாவில் கண்டன்விளை, சித்தன்தேப்பு, பண்டாரவிளை, இரணியல் பங்கு இறைமக்கள் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர்.