கலைஞர் உரிமை தொகை குருஞ்செய்தி வராதவர்கள் மத்தியில் பரபரப்பு

Share others

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் அண்ணா பிறந்த நாளான 15-9-2023 அன்று தொடங்கப்படுவதையொட்டி காணொலிக் காட்சி வாயிலாக தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆற்றிய உரை.கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் தொடக்க விழாவானது வருகிற 15 ம் நாள் காஞ்சிபுரத்தில் நடைபெற இருக்கிறது. அன்றைய தினமே அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் அமைச்சர்கள் முன்னிலையில் நடைபெற இருக்கிறது. தமிழ்நாடு அரசின் மிகப்பெரிய திட்டம் என்றால் இதுதான். ஒரே நேரத்தில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட பெண்கள் ஆயிரம் ரூபாயை மாதாமாதம் ஆண்டுதோறும் பெறப் போகிறார்கள். அதிகப்படியான நிதி ஒதுக்கீடு தேவைப்படும் திட்டமாகவும் அதிகப்படியான பயனாளிகள் உள்ளடக்கிய திட்டமாகவும் இது அமைந்துள்ளது. தகுதி வாய்ந்த பெண்களுக்கு உரிமைத் தொகை அவர்களது வங்கி கணக்கில் வரும் செப்டம்பர் 15 முதல் கிடைக்கும் வகையில் நாம் ஏற்பாடு செய்துள்ளோம். இத்தகைய தகுதி பெற்ற குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் தோறும் வங்கிகளில் அவர்களது கணக்கில் உரிமைத் தொகை வரவு வைக்கப்படும். ஏடிஎம் கார்டுகள் முதற்கட்டமாக குறிப்பிட்ட எண்ணிக்கையிலும் படிப்படியாக விரைவில் அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும் ஆனால் ஏடிஎம் கார்டு வழங்கப்படுவதற்காக காத்திருக்காமல் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவருக்கும் உரிமைத் தொகை வழங்கப்படும். பயனாளிகளுக்கு பணத்தை எடுப்பதில் எந்த சிக்கலும் ஏற்படக் கூடாது அதிலும் கவனமாக இருக்க வேண்டும். அதேபோல் வரும் 15ஆம் தேதி என்னுடைய சார்பில் மகளிருக்கு அனுப்பி வைக்கப்படும். குறுஞ்செய்தியில் பணம் எடுப்பது தொடர்பாக ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் அது குறித்து தகவல் தெரிவிக்க வேண்டிய டோல் ப்ரீ எண்ணும் சேர்க்கப்பட வேண்டும். இந்த திட்டத்தில் இணைந்து கொள்ள ஒரு கோடியே 63 லட்சம் விண்ணப்பங்கள் அரசுக்கு வந்துள்ளன. தகுதி உள்ளவர்கள் என நாம் ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர். அப்படியானால் மற்றவர்களது கோரிக்கை ஏன் ஏற்கப்படவில்லை என்பதை நாம் அவர்களுக்கு சொல்லியாக வேண்டும். எந்த அடிப்படையில் உங்களது கோரிக்கை எங்களால் ஏற்க முடியவில்லை என்பதற்கான காரணத்தை குறிப்பிட்டு அவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பியாக வேண்டும். இவ்வாறு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார். இந்த நிலையில் 13-9-2023 அன்று முதல் தகுதி உடையவர்களுக்கு சோதனையாக அக்கவுண்டில் ரூ.1 போடப்பட்ட குருஞ்செய்திகள் அனுப்பப்பட்டது. இதனால் மகளிர் மத்தியில் பெரும் உற்சாகம் ஏற்பட்டது. இந்த நிலையில் 14-9-2023 அன்று எதிர்பார்க்காத வகையில் ரூ.1000 வந்ததாக குருஞ்செய்திகள் அனுப்பப்பட்டது. இந்த குருஞ்செய்திகள் வந்த மகளிர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் குருஞ்செய்திகள் வராதவர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உதவி மையங்கள்

தமிழக முதலமைச்சரால், கலைஞர் மகளிர் உரிமைத்
திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு ரூ.1000 வழங்கும் தொடக்க விழா 15.9.2023
அன்று தொடங்கி வைக்கப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து சிவகங்கை
மாவட்டம், காரைக்குடி வட்டம் மற்றும் காரைக்குடி நகரில் பிஎல்பி பேலஸ் திருமண
மண்டபத்தில் 15.9.2023 அன்று காலை 10 மணியளவில்
கூட்டுறவுத்துறை அமைச்சரால் பயனாளிகளுக்கு ரூ.1000 வழங்கும்
நிகழ்வு தொடங்கி வைக்கப்படவுள்ளது.
மேலும், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தொடர்பான தகவல்கள்
மற்றும் விளக்கங்களை பொதுமக்கள் அறிந்து கொள்வதற்கு ஏதுவாக,
கீழ்க்காணும் அலுவலகங்களில் உதவி மையங்கள் செயல்பட்டு
வருகின்றன.

அதில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 7845145001 என்ற எண்ணிலும்,
சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் 7845738002 என்ற
எண்ணிலும், தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில்
7845014004 என்ற எண்ணிலும், சிவகங்கை வட்டாட்சியர் அலுவலகத்தில்
8438856008 என்ற எண்ணிலும், மானாமதுரை வட்டாட்சியர் அலுவலகத்தில்
892:5786003 என்ற எண்ணிலும், காளையார்கோவில் வட்டாட்சியர் அலுவலகத்தில்
8438957006 என்ற எண்ணிலும், திருப்புவனம் வட்டாட்சியர் அலுவலகத்தில்
8925664001 என்ற எண்ணிலும், இளையான்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில்
9042317001 என்ற எண்ணிலும், திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில்
8925078921 என்ற எண்ணிலும், காரைக்குடி
வட்டாட்சியர் அலுவலகத்தில்
8807378005 என்ற எண்ணிலும், தேவகோட்டை
வட்டாட்சியர் அலுவலகத்தில்
8870362101 என்ற எண்ணிலும், சிங்கம்புணரி வட்டாட்சியர் அலுவலகத்தில்
8122576001 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்
மேலும், பொது மக்கள் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்கள்
குறித்த தகவல்கள் தொடர்பாகவும், உதவி மையங்களில் தொடர்பு கொண்டு
பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித்,
தெரிவித்துள்ளார்.


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *