சிவகங்கை மாவட்டத்தில், பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளினை சிறப்பிக்கின்ற வகையில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான அண்ணா மிதிவண்டி போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியை மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
அதில், 13 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 15 கி.மீ தூரமும், 13 வயதிற்குட்பட்ட மாணவியர்களுக்கு 10 கி.மீ தூரமும், 15 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ தூரமும், 15 வயதிற்குட்பட்ட மாணவியர்களுக்கு 15 கி.மீ தூரமும், 17 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ தூரமும், 17 வயதிற்குட்பட்ட மாணவியர்களுக்கு 15 கி.மீ தூரமும் என மிதிவண்டி போட்டிகள் மேற்கண்ட பிரிவுகளின் படி நடைபெற்றது.
மேற்கண்ட மிதிவண்டி போட்டியில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகள் தங்களது சொந்த மிதிவண்டிகளை கொண்டு வருதல் . இந்தியாவில் தயாரான சாதாரண கைப்பிடிகளை கொண்ட மிதிவண்டிகள் மட்டுமே உபயோகப்படுத்தப்பட வேண்டும். கியர் சைக்கிள் மற்றும் ரேஸ் சைக்கிள் அனுமதிக்கப்படவில்லை
இப்போட்டிகளில் வெற்றி பெறும் முதல் மூன்று இடம் பெறுபவர்களுக்கு, முதல்பரிசு ரூ.5000/-மும், இரண்டாம் பரிசு ரூ.3000/-மும், மூன்றாம் பரிசு ரூ.2000/-மும் மற்றும் 4 முதல் 10 இடங்களை பெறுபவர்களுக்கு தலா ரூ.250/-மும் பரிசுத்தொகை, காசோலையாக வழங்கப்படும்.
மேற்கண்ட போட்டியானது, சிவகங்கை வேலுநாச்சியார் அரண்மனை வாசல் முன்பு தொடங்கப்பட்டு, 13 வயதிற்குட்பட்ட மாணவ மற்றும் மாணவியர்களுக்கு கற்பகம் விநாயகர் மெட்ரிக்குலேசன் பள்ளி வரையிலும், 15 வயதிற்குட்பட்ட மாணவ மற்றும் மாணவியர்களுக்கு நாட்டரசன்கோட்டை மின்வாரிய அலுவலகம் வரையிலும், 17 வயதிற்குட்பட்ட மாணவ மற்றும் மாணவியர்களுக்கு நாட்டரசன்கோட்டை ஆர்ச் வரையிலும் நடைபெற்றது.
சிவகங்கையில் இருந்து
நமது நிருபர் செல்வநாதன்