கன்னியாகுமரி மாவட்டம் நுள்ளிவிளை ஊராட்சிக்கு மக்களுடன் முதல்வர் முகாம் கண்டன்விளை அரசு மேல்நிலைப் பள்ளி உள் விளையாட்டு அரங்கத்தில் வைத்து நடந்தது. மாவட்ட ஆட்சியாளர் அழகு மீனா நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் முன்னிலையில் முகாமை துவக்கி வைத்து பேசினார். முகாமில் நுள்ளிவிளை ஊராட்சி தலைவர் பால்ராஜ் தலைமை வகித்தார். துணைத் தலைவர் ராஜன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றனர்.