மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி அருகே உள்ள மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலய பெருவிழா ஜனவரி மாதம் 17ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை நடக்கிறது. விழாவின் முதல் நாள் காலை 6 மணிக்கு மாடத்தட்டுவிளை பங்கில் பணியாற்றி நினைவில் வாழும் அருட் பணியாளர்கள், அருள் சகோதரிகள் மற்றும் பங்கிற்கு நிலம் தானம் கொடுத்தவர்கள் நினைவு திருப்பலி நடந்தது. மாலை 6 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, திருக்கொடியேற்றம், திருப்பலி குழித்துறை மறை மாவட்ட ஆயர் மேதகு ஆல்பர்ட் அனஸ்தாஸ் தலைமையில் நடந்தது. தக்கலை அருட்பணி ஆபிரகாம், அந்தோணியார்புரம் அருட்பணி ஜோசப் காலின்ஸ் ஆகியோர் விருந்தினராக கலந்து கொண்டனர். சிறப்பிப்போர் 1 முதல் 50 வரை உள்ள அன்பியங்கள், அன்பிய ஒருங்கிணையம், அடித்தள முழு வளர்ச்சி சங்கம், வில்லுக்குறி வட்டார மனிதநேயக் கூட்டமைப்பு . இரணியன் இன்ஸ்பெக்டர் செந்தில் வேல் குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். இரவில் பொதுக்கூட்டம், கலை நிகழ்ச்சிகள் நடந்தது. விழா நாட்களில் காலையில் திருப்பலி நடக்கிறது. 2 ம் நாள் விழாவில் மாலை 6 மணிக்கு செபமாலை, புகழ்மாலை, திருப்பலி அப்பட்டுவிளை புனித சூசையப்பர் ஆலயம் அருட்பணி சேவியர் புரூஸ் தலைமையில் அப்பட்டுவிளை புனித அந்தோணியார் ஆலயம் அருட்பணி ரொமெரிக் ததேயுஸ் மறையுரையோடு நடக்கிறது. இருதயபுரம் அருட்பணி ஜேம்ஸ் விருந்தினராக கலந்து கொள்கிறார். சிறப்பிப்போர் திருத்தூதுக் கழகங்கள் ( அனைத்து பக்த சபைகள்), இயக்கங்கள், சங்கங்களின் ஒருங்கிணையம். இரவில் பொதுக்கூட்டம் மற்றும் காப்புக்காடு சிற்பி தியேட்டர்ஸ் வழங்கும் புனித பவுல் வரலாற்று நாடகம் நடக்கிறது. 3 நாள் விழாவில் காலை 6 மணிக்கு திருப்பலி, திருமுழுக்கு வழங்குதல் கோட்டாறு மறை மாவட்ட மேனாள் ஆயர் மேதகு பீட்டர் ரெமிஜியூஸ் தலைமையில் நடக்கிறது. சிறப்பிப்போர் மறைக்கல்வி கழகம். மாலை 4.30 மணிக்கு நற்கருணை ஆசீர் குழித்துறை மறை மாவட்ட திருமண நீதிமன்ற ஆயர் பதிலாள் பேரருட்பணி ஆரோக்கிய ஜோஸ் தலைமையில் மாத்திரவிளை அருட்பணி கலிஸ்டஸ், மேல்புறம் அருட்பணி வின்சோ ஆன்றனி, கொன்னக்குழிவிளை அருட்பணி சேவியர் ராஜ் ஆகியோர் மறையுரையோடு நடக்கிறது, இரவு 8.30 மணிக்கு மறைக்கல்வி கழக பொதுக்கூட்டம் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. 4 ம் நாள் விழாவில் காலை 6 மணிக்கு திருப்பலி காரங்காடு மறைவட்ட முதன்மை பணியாளர் பேரருட்பணி சகாய ஜஸ்டஸ் தலைமையில் நாகக்கோடு அருட்பணி புஷ்பராஜ் மறையுரையோடு நடக்கிறது. சிறப்பிப்போர் பங்கு இறைமக்கள். மாலை 6 மணிக்கு செபமாலை, புகழ்மாலை, திருப்பலி சுங்கான்கடை தாதியர் கல்லூரி தாளாளர் அருட்பணி டோமினிக் சாவியோ தலைமையில் முளகுமூடு மறைவட்ட முதன்மை பணியாளர் பேரருட்பணி டேவிட் மைக்கேல் மறையுரையோடு நடக்கிறது. விருந்தினர் கப்பியறை அருட்பணி ஜெயபாலன், சகாயநகர் அருட்பணி மரிய ஆன்றோ ஹால்வின், துண்டத்துவிளை அருட்பணி எக்கர்மன்ஸ் மைக்கேல், ஜெர்மெனி அருட்பணி பெஞ்சமின். சிறப்பிப்போர் மரியாயின் சேனை, இரவு 8.30 மணிக்கு பொதுக்கூட்டம், கலைநிகழ்ச்சிகள், வில்லுக்குறி குருசடி அர்ச்சித்து 50 ஆண்டுகள் நிறைவு நடக்கிறது. 5 ம் நாள் விழாவில் மாலை 6 மணிக்கு செபமாலை, புகழ்மாலை, திருப்பலி கோணங்காடு அருள் முனைவர் பீட்டர் தலைமையில் முள்ளங்கினாவிளை அருட்பணி ஆன்ட்ரூஸ் மறையுரையோடு நடக்கிறது. விருந்தினர் தக்கலை அருட்பணி அந்தோணி முத்து. சிறப்பிப்போர் சிறார் பணிக்குழு. இரவு 8.30 மணிக்கு பொதுக்கூட்டம் கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது. 6 ம் நாள் விழாவில் மாலை 6 மணிக்கு செபமாலை, புகழ்மாலை, திருப்பலி கண்டன்விளை அருட்பணி பிருதிவி தாமஸ் தலைமையில் மாத்திரவிளை அருட்பணி அனீஷ் மறையுரையோடு நடக்கிறது. விருந்தினர் முரசன்கோடு அருட்பணி ரெஞ்சித், பள்ளியாடி அருட்பணி ஜாக்சன், முளகுமூடு அருட்பணி அனீஷ். சிறப்பிப்போர் இளைஞர் இயக்கம் ஆண்கள், இளைஞர் இயக்கம் பெண்கள், இளம் கிறிஸ்தவ மாணாக்கர் இயக்கம். இரவு 8.30 மணிக்கு பொதுக்கூட்டம் கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது. 7 ம் நாள் விழாவில் மாலை 6 மணிக்கு செபமாலை, புகழ்மாலை, திருப்பலி நட்டாலம் அருள் முனைவர் பால்ரிச்சர்டு ஜோசப் தலைமையில் கூட்டமாவு அருட்பணி பெஞ்சமின் மறையுரையோடு நடக்கிறது. விருந்தினர் பரக்குன்று அருட்பணி வெலிங்டன், கல்லறவிளை அருட்பணி அஜின் ஜோஸ். சிறப்பிப்போர் கல்வி நிறுவனங்கள். இரவு 9 மணிக்கு தேர்ப்பவனி நடக்கிறது. 8 ம் நாள் விழாவில் காலை 6 மணிக்கு திருப்பலி வெள்ளிக்கோடு அருட்பணி மைக்கேல் அலோசியஸ் தலைமையில் பூட்டேற்றி அருட்பணி ஷிஜின் மறையுரையோடு நடக்கிறது. விருந்தினர் சுவாமியார்மடம் அருட்பணி இராயப்பன். 10 மணிக்கு வில்லுக்குறி வட்டார மனிதநேய கூட்டமைப்பு பொதுக்கூட்டமும், 11 மணிக்கு பகிர்வின் சமபந்தி விருந்தும் நடக்கிறது. சிறப்பிப்போர் கத்தோலிக்க சங்கம். மாலை 6 மணிக்கு செபமாலை, புகழ்மாலை, திருப்பலி ஆயர் இல்லம் நிதிபரிபாலகர் பேரருட்பணி ஜெயக்குமார் தலைமையில் குழித்துறை மறைமாவட்டம் கூட்டாண்மை மேலாளர் அருள்முனைவர் டோமினிக் கடாட்சதாஸ் மறையுரையோடு நடக்கிறது. விருந்தினர் சுவாமியார்மடம் அருட்பணி ஸ்தனிஸ்லாஸ். சிறப்பிப்போர் வில்லுக்குறி பங்கு இறைமக்கள். இரவு 9 மணிக்கு தேர்ப்பவனி நடக்கிறது. 9 ம் நாள் விழாவான 25 ம் தேதி காலை 6 மணிக்கு முதல் திரு விருந்து திருப்பலி யுஎஸ்ஏ அருட்பணி தீஸ்மாஸ் தலைமையில் கண்டன்விளை அருட்பணி மரிய வின்சென்ட் மறையுரையோடு நடக்கிறது. விருந்தினர் குரிவிளை அருட்பணி செபாஸ்டின். சிறப்பிப்போர் முதல் திருவிருந்து பெறும் சிறார்கள்.மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, சிறப்பு மாலை ஆராதனை புலியூர் குறிச்சி அருட்பணி ஜேசுரெத்தினம் தலைமையில் மார்த்தாண்டம் மறை மாவட்ட ஆயர் மேதகு வின்சென்ட்மார் பவுலோஸ் மறையுரையோடு நடக்கிறது. விருந்தினர் மஞ்சாடி அருட்பணி ஜோஸ் பிரசாந்த், வட்டம் அருட்பணி ஜோசப் ஸ்டாலின், தக்கலை அருட்பணி வென்சஸ்லாஸ். சிறப்பிப்போர் பணித்திட்ட குழுக்கள், புனித செபஸ்தியார் பங்கு வளர்ச்சி நிறுவனம், செயின்ட் செபஸ்தியான் நிதி லிமிடெட், புனித செபஸ்தியார் கல்வி மற்றும் மேம்பாட்டு அறக்கட்டளை. இரவு 9 மணிக்கு தேர்ப்பவனி, சிறப்பு தவில், வானவேடிக்கை நடக்கிறது. 10 ம் நாள் விழாவான 26 ம் தேதி காலை 5.30 மணிக்கு திருவிழா ஆடம்பர கூட்டு திருப்பலி குழித்துறை மறைமாவட்ட முதன்மை அருட்பணியாளர் பேரருட்பணி சேவியர் பெனடிக்ட் தலைமையில் கன்னியாகுமரி மறைவட்ட முதன்மை அருட்பணியாளர் பேரருட்பணி ஜாண்சன் மறையுரையோடு நடக்கிறது. சிறப்பிப்போர் பங்கு மேய்ப்புப்பணி பேரவை, பாடகற்குழு. 8.30 மணிக்கு திருவிழா திருப்பலி குழித்துறை மறைமாவட்ட முதன்மை செயலர் பேரருட்பணி அந்தோணி முத்து தலைமையில் சுங்கான்கடை அருட்பணி சார்லஸ் விஜூ மறையுரையோடு நடக்கிறது. விருந்தினர் அழகியமண்டபம் ஆதாமையம் இயக்குநர் அருட்பணி ஜோஸ் இராபின்சன், வில்லுக்குறி உளநலமையம் அருட்பணி ஸ்தனிஸ்லாஸ். சிறப்பிப்போர் பங்கு இறைமக்கள், திருவழிபாட்டு குழு. மதியம் 2 மணிக்கு தேர்ப்பவனி , சிறப்பு தவில், இரவு 8 மணிக்கு மாடத்தட்டுவிளை பங்கில் கண்தானம் செய்தவர்களின் குடும்பத்தினருக்கு பாராட்டு வழங்குதல் ( வழி நடத்துபவர்கள் திருக்குடும்பத் திரு இயக்கம்) மற்றும் திருவிழா நன்கொடையாளர்கள், சிறப்பு குழுக்களின் பொறுப்பாளர்களை கவுரவித்தலும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை பங்கு மேய்ப்புப்பணி பேரவை, பங்கு இறைமக்கள், அருட்சகோதரிகள், பங்குத் தந்தை அருட்பணி மரிய இராஜேந்திரன், இணை பங்குத்தந்தை அருட்பணி அருள் வினீஷ், பங்கு அருட்பணி பேரவை துணைத் தலைவர் எட்வின் சேவியர் செல்வன், செயலாளர் ராணி ஸ்டெல்லா பாய், துணைச் செயலாளர் ஜோஸ் வால்டின், பொருளாளர் லூக்காஸ் ஆகியோர் இணைந்து செய்து உள்ளனர்.
மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலய பெருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது
