பாரம்பரிய காய்கறி விதைகளை மீட்டெடுக்கும் விவசாயிகளுக்கு
மாவட்ட அளவிலான விருதுகள்
கன்னியாகுமரி மாவட்டத்தில் பாரம்பரிய காய்கறி விதைகளை
மீட்டெடுக்கும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் 2023-24-ம் நிதி
ஆண்டில் மாவட்ட அளவில் சிறந்த விவசாயிகளை தேர்வு செய்து விருது
வழங்கப்பட உள்ளது. தேர்வு செய்யப்படும் விவசாயிகளுக்கு முதலாம் பரிசாக
ரூ.15,000 மற்றும் இரண்டாம் பரிசாக ரூ.10,000 வழங்கப்படும். பாரம்பரிய
காய்கறிகள் சாகுபடியில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கான விருதிற்கு
பாரம்பரிய காய்கறிகள் சொந்த அல்லது குத்தகை நிலத்தில் சாகுபடி செய்யும்
அனைத்து விவசாயிகளும் பங்கு பெறலாம். பங்கு பெற விரும்பும் விவசாயிகள்
www.tnhorticulture.tn.gov.in என்னும் இணையதளத்தில் விண்ணப்பங்களை
பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட வட்டார
தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
விவசாயிகள் அதிக பாரம்பரிய காய்கறி ரகங்களை மீட்டெடுத்தல், பிற
விவசாயிகளிடம் பாரம்பரிய காய்கறி விதைகளை கொண்டு சேர்த்தல், நீர்
மேலாண்மை, முறையான மண் வள மேம்பாடு, அங்கக முறையில் விதைகளை
மீட்டெடுத்தல் ஆகிய காரணிகளின் அடிப்படையில் மாவட்ட அளவிலான நிபுணர்
குழுவின் மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் கூடுதல் விபரங்கள் பெற
விவசாயிகள் அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர்
அலுவலகங்களை அணுகி பயன் பெறுமாறு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் தெரிவிக்கிறார்.