கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஆடி அமாவாசையை முன்னிட்டு 12.8.2026 (புதன்கிழமை) அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது.
12.8.2026 அன்று அறிவிக்கப்பட உள்ள உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக 2026 ஆகஸ்ட் திங்கள் நான்காவது சனிக்கிழமை (22.8.2026) அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் இயங்கும் அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வேலை நாளாக இருக்கும்.
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஆடி அமாவாசையை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை செலவாணி முறிச் சட்டம் 1881 இன் படி அறிவிக்கப்படவில்லை என்பதால் 12.8.2026 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் தலைமைக் கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசரப் பணிகளைக் கவனிக்கும் பொருட்டு, தேவையான பணியாளர்களைக் கொண்டு இயங்கும் என மாவட்ட ஆட்சியாளர் பிரதாப் தெரிவித்து உள்ளார்.