கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிரடி சோதனை.
அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா மற்றும் சட்ட விரோதமாக மது விற்ற நபர்கள் மீது வழக்குப்பதிவு.
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அன்ஷுல் நாகர் அதிரடி உத்தரவின்படி, மாவட்டம் முழுவதும் இந்த மாதத்தில் அனைத்து காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வாகன சோதனை மற்றும் கடைகளில் தீவிர சோதனை நடத்தப்பட்டது.
சட்டவிரோத செயல்களை தடுக்கும் பொருட்டு நடத்தப்பட்ட இந்த சோதனையில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 3.260 கிலோ கிராம் கஞ்சா , 9.045 கிலோ கிராம் குட்கா புகையிலை மற்றும் சட்ட விரோதமாக கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 901 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த அதிரடி சோதனையின் போது, சட்டம் விரோதமாக கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்கு மது பாட்டில்களை பதுக்கி வைத்த குற்றத்திற்காக 36 நபர்கள் மீது காவல்துறை சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. அதேபோல், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா மற்றும் குட்கா விற்பனை செய்த குற்றத்திற்காக இளஞ்சிறார் உட்பட 16 நபர்கள் மீதும் வழக்குகள் பதியப்பட்டு உள்ளன.
மேலும் இத்தகைய சோதனையானது மாவட்டம் முழுவதும் தொடர்ந்து நடைபெறும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அன்ஷுல் நாகர் எச்சரித்து உள்ளார்.
முதல் முறையே மறுப்போம் போதை பாதையை தவிர்ப்போம்.