தேசிய அஞ்சல் வார விழா

Share others

தேசிய அஞ்சல் வார விழாவினையொட்டி கன்னியாகுமரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தீத்தாரப்பன்  வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் தெரிவித்து உள்ளதாவது.
1874 ஆம் ஆண்டு சர்வதேச அஞ்சல் ஒன்றியம்  நிறுவப்பட்டதன் நினைவாக இந்திய அஞ்சல் துறை ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 9ஆம் தேதி உலக அஞ்சல் தினமாக கொண்டாடி வருகிறது. அதன் பகுதியாக இந்திய அஞ்சல் துறையின் சார்பில் உலக அஞ்சல் தினம் மற்றும் தேசிய அஞ்சல் வார விழா அக்டோபர் 9 முதல் 15-ம் தேதி வரை கன்னியாகுமரி அஞ்சல் கோட்டத்தில் கொண்டாடப்படுகிறது.
 
இந்த ஆண்டின் கருப்பொருள் ஒரே அஞ்சல் வலையமைப்பு – எல்லையற்ற வாய்ப்புகள்  என்பது ஆகும்.

இதையொட்டி, அக்டோபர் 9-ம் தேதி உலக அஞ்சல் தினத்தன்று அஞ்சல் அலுவலகங்களில் பதாகைகள் மற்றும் டிஜிட்டல் காட்சிகள் அமைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

அக்டோபர் 12-ம் தேதி அஞ்சல் தலை சேகரிப்பு தினத்துடன் கொண்டாட்டம் கொண்டாடப்படுவதையொட்டி, மாணவர்களுக்கான வினாடி வினா, கடிதம் எழுதும் போட்டி, அஞ்சல் தலை சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் பயிலரங்குகள் நடத்தப்படுகின்றன.

அக்டோபர் 13-ம் தேதி  நிதி உள்ளடக்கம் மற்றும் சிபிஎஸ் தினம் அன்று அஞ்சல் ஆயுள் காப்பீடு, இந்தியா போஸ்ட் பேமண்ட் வங்கி சேவைகள், சிறுசேமிப்பு திட்டங்களுக்கான சிறப்பு முகாம்கள் அனைத்து அஞ்சலகங்களிலும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மேலும் அஞ்சலக நிதி சேவைகள் குறித்த சிறப்பு தெருக்கூத்து நாடகங்களும் உப அஞ்சல் கோட்ட அளவில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

அக்டோபர் 14-ம் தேதி  தபால் மற்றும் பார்சல் தினம், அன்று விரைவு தபால் சேவைகள், சர்வதேச பார்சல் சேவைகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெறும். மேலும் வாடிக்கையாளர் சந்திப்பு நிகழச்சியும் அன்றைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. வாடிக்கையாளர்களின் அஞச்ல் துறையுடனான உறவு மற்றும் அவர்களின் மதிப்புமிக்க கருத்துக்களும் அன்றைய தினம் கேட்டறியப்படும். இது அஞ்சல் துறையின் வளர்ச்சிக்கு மேலும் உதவும்.

அக்டோபர் 15-ம் தேதி தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க தினம் அன்று வளர்ந்து வரும் தொழில்நுட்ப மாற்றத்திற்கு ஈடு கொடுக்கும் வகையில் அஞ்சல் துறையில் நடந்து வருகிற ஆக்கப்பூர்வமான தொழில்நுட்ப மாறுதல்கள் பற்றிய கருத்தரங்கமும் ஊழியர்களுக்கு இடையேயான வினாடிவினா நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. மேலும் அஞசல் சேவைகள் குறித்த விழிப்புணர்வு நடைபயணம் நாகர்கோவில் தலைமை அஞ்சலகத்தினால் நடத்தப்படும்.

பொதுமக்கள் அனைவரும் அஞ்சல் வார விழாவின் நிகழ்வுகளில் கலந்து கொண்டு அஞ்சல் துறையின் சேவைகள் பற்றிய விழிப்புணர்வையும் ஆதார் தொடர்பான தங்களின் சேவைகளையும் பூர்த்தி செய்து பயன் பெறுமாறு கன்னியாகுமரி அஞ்சல் கோட்ட  கண்ணாணிப்பாளர் தீத்தாரப்பன்  தெரிவித்து உள்ளார்

Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *