தமிழ்நாடு காமராஜர் நற்பணி மன்றம் சார்பில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமாரிடம் கோரிக்கை மனு

Share others

குமரி மாவட்டத்தில் அரசு சார்பில் பல்கலைக்கழகம் அமைத்திடவும், தமிழ்நாடு மாநிலபசுமை விருது பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தேசிய பசுமை விருது பெற உரிய நடவடிக்கை எடுக்குமாறும், தமிழ்நாட்டில் அனைத்து ஊர்ப்புற நூலகங்களை
தரம் உயர்த்தும் பொருட்டு ஊர்ப்புற நூலகர்களை பணி நிரந்தரம் செய்திடவும், கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு சார்பில் சித்த மருத்துவகல்லூரி, சட்டக் கல்லூரி, மீன்வள கல்லூரி, கால்நடை மருத்துவ கல்லூரி, காற்றாலை தொழில்நுட்பக் கல்லூரி, செயற்கை நுண்ணறிவு கல்லூரி ,வன கல்லூரி,செவிலியர் கல்லூரி, விவசாய கல்லூரி ஆகிய கல்லூரிகளை அமைத்திடவும் தொழில் பூங்காக்கள் அமைத்திட உரிய நடவடிக்கை எடுக்கும்படியும், உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதலின்படி குமரி மாவட்டத்தில் குடிநீர் தர நிர்ணயம் ஆய்வகத்தினை உருவாக்கி ஜல்ஜீவன் நிதி மூலம் சுத்தமான குடிநீர்  மாவட்ட  மக்களுக்கு கிடைத்திட நடவடிக்கை எடுத்திடவும் தமிழ்நாடு காமராஜர் நற்பணி மன்றம் சார்பில் உருவாக்கிய நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலைக்கு இடம் அனுமதி அளிக்கவும் நாகர்கோவில் மாநகராட்சி மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண உலக்கை அருவி அணைத் திட்டத்தினை செயல்படுத்திடவும் உட்பட 20 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றித் தர  சுற்றுலாத்துறை அமைச்சர்  ராஜேஷ்குமாரை அவரது இல்லத்தில் தமிழ்நாடு காமராஜர் நற்பணி மன்ற
 தலைவர் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். மனு கொடுக்கும் நிகழ்ச்சியில் கருங்கல் ஜார்ஜ், ராஜபாண்டியன், பாஸ்கர், ராஜு, சதீஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர் சுற்றுலாத்துறைஅமைச்சர் அவர்களிடம் தமிழ்நாடு காமராஜர் நற்பணி மன்றம் மற்றும் ஒரு லட்சம் கையெழுத்து இயக்கம் சார்பில் கொடுக்கப்பட்ட கோரிக்கைகள் பற்றிய விவரங்கள


1. குமரி மாவட்டத்தில் அரசு சார்பில்பல்கலைக்கழகம் அமைத்திடல் 
2. தமிழ்நாடு மாநில பசுமை விருது பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தேசிய பசுமை விருதுக்குரிய அந்தஸ்துக்கான உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் 
3. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஊர் புற நூலகங்களை தரம் உயர்த்தும் பொருட்டு அனைத்து ஊர்ப்புற நூலகர்களை பணிநிரந்தரம் செய்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் 
4. கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு சார்பில் விவசாய கல்லூரி , சட்டக் கல்லூரி, சித்த மருத்துவக் கல்லூரி, செவிலியர் கல்லூரி, கால்நடை மருத்துவ கல்லூரி, செயற்கை நுண்ணறிவு   கல்லூரி, காற்றாலை தொழில்நுட்பக் கல்லூரி, வனக்கல்லூரி அமைத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் நவீன தொழில் பேட்டை,, தகவல் தொழில்நுட்ப பூங்கா உடனே அமைக்க வேண்டும.
 5. தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பழைய ஓய்வு திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் 
6.  கல்வி கடன் விவசாய     கடன் அனைத்தும் ரத்து   செய்திட வேண்டும் 
7. பெருந்தலைவர் காமராஜரால் உருவாக்கப்பட்ட அரசு ரப்பர் கழகத்தினை நன்றாக மேம்படுத்திட அரசு ரப்பர் கழகம்  இருக்கும் இடத்திலேயே உலகத்தரம் வாய்ந்த ரப்பர் தொழிற்சாலை அமைத்திட வேண்டும் அதோடு அரசு ரப்பர் கழக தொழிலாளர்களின் அனைத்து பிரச்சனையும் தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் 
8. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மகாதேவன் பிள்ளைக்கும், குமரி விடுதலை போராட்ட தியாகிகள் சிதம்பரநாதன், குஞ்சன் நாடார், லூர்தம்மாள் சைமன் ஆகியோர்களுக்கும் நாகர்கோவிலில் நினைவு மண்டபங்கள் அமைத்திட வேண்டும்  
9. குமரி மாவட்டத்தில் அரசு புற்றுநோய் மருத்துவமனை அமைக்க வேண்டும் 
10. இயற்கை பேரிடர் காரணமாக கடல் தொழில் செய்யும் மீனவர்கள் காணாமல் போகும் நேரத்தில் மீனவர்களின் உயிரை பாதுகாக்க அவசர உதவிக்கு ஹெலிகாப்டர்களுடன்  கூடிய ஹெலிகாப்டர் தளம் குமரி மாவட்டத்தில் அமைக்க வேண்டும்
11. கன்னியாகுமரி மாவட்டத்தில் விமான நிலையம் அமைக்க வேண்டும்
12. உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதல்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக குடிநீர் வழங்கும் பணிகளை உள்ளாட்சி அமைப்புகள் மற்றும்  தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மேற்கொண்டலும் உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதல்கள் படி குடிநீரை பிஐஎஸ் 10500 படி ஆண்டுக்கு மூன்று முறை தரநிர்ணயம் செய்து குடிநீர் கொள்ளை நோய்கள் ஏற்படாதவாறு பாதுகாக்கப்பட்ட குடிநீர் பொது மக்களுக்கு வழங்க வேண்டியது பொது சுகாதார துறையின் பொறுப்பு. எனவே கன்னியாகுமாரி மாவட்டத்தில் மாவட்ட குடிநீர் தர நிர்ணய பகுப்பாய்வகம் ஏற்படுத்த வேண்டும்.  பாதுகாக்கப்பட்ட ஆரோக்கியமானகுடிநீர் உறுதிப்படுத்தும் வகையில் சுகாதாரத் துறையின் கீழ் மாவட்ட குடிநீர் தர நிர்ணய ஆய்வகத்தினை கன்னியாகுமரி மாவட்டத்தில் தேசிய சுகாதார நிதியில் புதிதாக ஏற்படுத்தவும் மற்றும் மாவட்டந்தோறும் குடிநீர் தர நிர்ணய பணிகளை மேற்கொள்ள 21.3.2025 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட வேதியலாளர் ஆய்வக நிபுணர் மற்றும் உதவியாளர் பணியாளர்களை ஜல் ஜீவன் நிதி 25-26 ஆண்டு வழங்கவில்லை என 9-10-2025 அன்று முதல் பணி நிறுத்தம் செய்யப்பட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி நீடிப்பு செய்து இந்த மாவட்ட மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் பணிகளை தொடர வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைக்கப்படுகிறது
13. நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் 
14. தமிழ்நாடு காமராஜர் நற்பணி மன்றம் உருவாக்கிய நடிகர் திலகம் சிவாஜி கணேசன்  சிலைக்கு இடம் அனுமதி அளிக்கவும் உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும்
15. நாகர்கோவில் மாநகராட்சி மக்களின் குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண உலக்கை அருவியில் இருந்து நீர் கொண்டுவரும் திட்டத்தினை செயல்படுத்திட தமிழக அரசை வலியுறுத்துகிறோம்
16. மிகப்பெரிய கடல் வளம் கொண்ட குமரி மாவட்டத்தில் மீன்வளம் சார்ந்த மிகப்பெரிய தொழிற்சாலைகளை உருவாக்க வேண்டும் 
17. கூட்டுறவு ஊழியர்களுக்கு அரசு ஊழியர்களுக்கான இணையான சம்பளம் மற்றும் ஓய்வூதியம் குறைந்தது பத்தாயிரம் வழங்க வேண்டும் 
18. குமரி மாவட்டத்தில் பல்லி குட்டம் அணை திட்டத்தினை செயல்படுத்திட வேண்டும் 
19. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆரல்வாய்மொழி கூட்டுறவு நூற்பாலையை நவீனப்படுத்தி தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் 
20. தனியார் காடு சட்டத்தினை ரத்து செய்தும் மக்கள் வசிக்கும் பகுதியில் சூழலிய மண்டல திட்டத்தினை ரத்து செய்ய கோருதல்.

Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *