100 சதவீதம் வாக்குப்பதிவுக்காக தன்னார்வ பணி செய்வதாக வாக்குறுதி

Share others

நடத்தை மாற்றுதல் பட்டயப் பயிற்சியின் சுற்றுலா தின சிறப்பு வகுப்பில் நடைபெறவிருக்கும் தேர்தலில் பயிற்சி பெறுநர்கள் 300 பேரும் ஓட்டு போடுவதாகவும் 100 சதவீதம் வாக்குப்பதிவுக்காக தன்னார்வ பணி செய்வதாகவும் வாக்குறுதி அளித்தனர்.

இந்திய அரசின் போதை இல்லாத இந்தியா திட்டத்தின் கீழ் ஹோலி கிராஸ் கல்லூரியும், திருப்புமுனை போதை நோய் நலப்பணியும்,கன்னியாகுரி மாவட்ட சமூக நலத்துறையுடன் இணைந்து நடத்தும் 100 மணிநேர நடத்தை மாற்றுதல் 20 வார பட்டயப் பயிற்சி கடந்த நவம்பர் மாதம் தொடங்கி நடந்து வருகிறது.

18 வது வகுப்பானது சுற்றுலா வகுப்பாக நடந்தது.

நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் இருந்து இரண்டு சிறப்பு பேருந்து புறப்பட்டு அண்ணா பேருந்து நிலையம், சுசீந்திரம், கொட்டாரம் வழியாக கன்னியாகுமரி வந்தது. கன்னியாகுமாரி அஞ்சுகூட்டுவிளையில் உள்ள கென்சன் கலையரங்கில் வைத்து நடந்தது. பயிற்சியை வளர்இளம்பருவ நிபுணர் மற்றும் ஆலோசகர் அருட்பணி கிரேஸ் குணபால் வளரிளம் பருவம் குறித்து சிறப்பு வகுப்பு நடத்தினார்.

இந்த வகுப்பில் சுமார் 300 பயிற்சி பெறுநர்கள் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர்.பின்னர் குழு ஆய்வும், கலந்துரையாடலும் நடந்தது. தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்கப்பட, பயிற்சி பெறுநர்கள் எல்லோரும் ஓட்டு போடுவதாகவும், அதற்காக தன்னார்வப்பணி செய்வதாகவும் வாக்குறுதி அளித்தனர்.

பயிற்சியில் மதியம் அனைவருக்கும் அருசுவையான விருந்து உணவாக வழங்கப்பட்டது.
சுற்றுலா தின வகுப்புக்கான ஏற்பாட்டை பயிற்சியின் இயக்குநர் முனைவர் பிரான்சிஸ் சேவியர் நெல்சன் சிறப்பாக செய்திருந்தார்.
பேருந்திற்கான ஏற்பாட்டை நாகர்கோவில் போக்குவரத்துக்கு கழக துணை மேலாளர் ஜேரோலின் லிஸ்பன் சிங் செய்திருந்தார்.

இருபது வார வகுப்புகள் நிறைவில் பங்கேற்பாளர்களுக்கு மாவட்ட ஆட்சியாளர், சமூக நலத்துறை அதிகாரி மற்றும் கோட்டார் மறைமாவட்ட ஆயர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் பயிற்சியில் தேர்ச்சி பெற்றதற்கான டிப்ளமோ சான்றிதழ் வழங்கப்படும் என்று நடத்தை மாற்றுதல் பட்டய பயிற்சி இயக்குநர், முனைவர் நெல்சன் தெரிவித்துள்ளார் .


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *