தாய்மார்கள் அனைவரும் நல்ல உடல் ஆரோக்கியத்துடனும் மகிழ்ச்சியுடனும் இருக்க வேண்டும் – சமுதாய வளைகாப்பு நடத்தி வைத்து சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் கர்ப்பிணிதாய்மார்களுக்கு அறிவுறுத்தல்.
/
கன்னியாகுமரி மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மற்றும் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டப்பணிகளின் சார்பில் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முஞ்சிறை மற்றும் கிள்ளியூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு நடத்தும் விழா மாவட்ட ஆட்சியாளர் பிரதாப் தலைமையில் கருங்கல் பேரூராட்சிக்கு உட்பட்ட கருமாவிளை சிஎஸ்ஐ சமுதாய நலக்கூடத்தில் நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார், கலந்து கொண்டு கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு நடத்தி வைத்து சீர்வரிசை வழங்கி பேசுகையில்:-
தமிழ்நாடு அரசின் சார்பில் ஆண்டுதோறும் சமுதாய வளைகாப்பு விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட முஞ்சிறை மற்றும் கிள்ளியூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 200 கர்ப்பிணி தாய்மார்களுக்கு நடத்தி வைக்கப்படும் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். கர்ப்பிணி தாய்மார்கள் கருவுற்ற நாளில் இருந்து மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற உயரிய நோக்கில் அவர்களுக்கு என பல்வேறு நலத்திட்ட உதவிகள் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
கர்ப்பிணி தாய்மார்களின் ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்தின் முக்கியத்துவம் குறித்து துறை அலுவலர்கள் விளக்கினார்கள். கர்ப்ப காலத்தில் தாய்மார்கள் மன மகிழ்ச்சியுடனும், ஊட்டச்சத்துமிக்க உணவுகளை உட்கொண்டும் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே பிறக்கும் குழந்தை நல்ல உடல்நலனுடனும் அறிவுத்திறனுடனும் வளரும். கர்ப்ப காலத்தில் எடையில் ஏற்படும் மாற்றங்கள் இயல்பானவை. உங்களுடைய குழந்தை குறைந்தது 3 கிலோ வரை இருக்க வேண்டும். அதற்கு கர்ப்பிணி பெண்கள் புரோட்டின், இரும்புச்சத்து, கால்சியம் மற்றும் வைட்டமின் சத்துமிக்க உணவுகளை அதிகளவு உணவில் சேர்க்க வேண்டும்.
கர்ப்ப காலத்தில் ஏற்படும் ரத்த சோகையை தடுக்க இரும்பு சத்து மற்றும் போலிக் அமில மாத்திரைகளை தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும். நீங்கள் மன அழுத்தம் மற்றும் வேதனையில் இருந்தால் உங்கள் குழந்தையின் வளர்ச்சியை பாதிக்கும். எனவே நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அதேபோன்று குழந்தை பிறந்த பிறகும் உங்களுக்கு ஆரோக்கியமான உணவு மற்றும் குழந்தைக்கு ஆரோக்கியமான உணவு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டங்கள் மூலமாக கர்ப்பிணிகளுக்கு பல்வேறு விழிப்புணர்வுகளையும் வழிமுறைகளையும் வழங்கி வருகிறது. மேலும், அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் தாய்மார்களுக்கு தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம், பெண்களுக்கான 100 கி.மீ இலவச பேருந்து வெற்றி பயணத் திட்டம் போன்ற பல்வேறு தொலைநோக்குத் திட்டங்களை முதலமைச்சர் செயல்படுத்தி வருகின்றார். சமுதாயத்திலும் நாட்டின் வளர்ச்சியிலும் பெண்களின் பங்கு முதன்மையானது. தாய்மார்கள் அனைவரும் நல்ல உடல் ஆரோக்கியத்துடனும் மகிழ்ச்சியுடனும் இருக்க வேண்டும். இவ்வாறு சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ் குமார் பேசினார்.
அதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியாளர் பிரதாப் தலைமையில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ் குமார் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நடத்தி வைத்து, அவர்களுக்கு சீர்வரிசை வழங்கினார். முன்னதாக ஊட்டச்சத்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டு இருந்த உணவு பிரமிடு, சிறுதானிய உணவின் செயல்முறை விளக்கம் மற்றும் சரிவிகித உணவு முறைகள் குறித்த கண்காட்சியினை சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ் குமார் மாவட்ட ஆட்சியாளர் பிரதாப் ஆகியோர் பார்வையிட்டார்கள்.
விழாவில் பத்மநாபபுரம் சார் ஆட்சியர் மாலதி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் (பொ) காயத்ரி, கருங்கல் பேரூராட்சி தலைவர் சிவராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிறிஸ்டோபர் ராஜேஷ், சாந்தி, வட்டார மருத்துவ அலுவலர்கள் ஸ்டாலின் ஜோஸ், ராஜகுமார், செயல் அலுவலர் சத்யராஜ், முஞ்சிறை வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் கோமதி, முன்னாள் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சிந்துகுமார், கர்ப்பிணி தாய்மார்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.
தாய்மார்கள் அனைவரும் நல்ல உடல் ஆரோக்கியத்துடனும் மகிழ்ச்சியுடனும் இருக்க வேண்டும் - சமுதாய வளைகாப்பு நடத்தி வைத்து சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் கர்ப்பிணிதாய்மார்களுக்கு அறிவுறுத்தல்.